இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற பால் பொருட்கள் நிறுவனமான அமுலின் பொருட்கள் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராம் பிரசாத் என்ற தொழில் முனைவோர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார் . அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் அமெரிக்காவின் கோஸ்ட்கோ சூப்பர் மார்க்கெட்டில் அமுல் நிறுவனத்தின் பால் விற்பனை செய்யப்படுவது இடம்பெற்றுள்ளது. ஜார்களில் விற்பனை செய்யப்படக்கூடிய அந்த பாலில் அமுல் கோல்டு என்றும் ஆறு சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்தது என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

ராம் பிரசாத்தின் இந்த பதிவுக்கு எக்ஸ் பயனர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். டெக்சாஸின் ஆஸ்டின் பகுதியில் இருக்கக்கூடிய கடையில் தான் அமுல் நிறுவனத்தின் ஃபிரஸ்ஸான பால் விற்பனை செய்யப்படுகிறது என அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும், கருத்துக்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் அமுல் நிறுவனத்தின் சீஸ் விற்பனை செய்தால் நான் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் என கூறியுள்ளார்.
அமுல் நிறுவனத்தின் பட்டர் விற்பனை செய்யப்பட்டால் தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும் என கூறினார். அமுல் நிறுவனத்தின் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது, அவர்களுக்கு இங்கே பால் பண்ணைகள் இருக்கிறதா என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒரு பயனர் இந்தியாவில் இருந்து இவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என பதில் அளித்துள்ளார்.
பலரும் அமுல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த பால் கூட்டுறவு சங்கமான அமுல் நிறுவனம் முதல் முறையாக தங்களுடைய பால் பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. நான்கு வகையான பால் பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
அமுல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான மேதா இந்தியாவில் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் புகழ்பெற்றிருக்கும் உங்களுடைய அமுல் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் பிரஸ்ஸான பாலை விற்பனை செய்ய இருக்கிறது.
இதற்காக அமுல் நிறுவனம் அமெரிக்காவின் 108 ஆண்டுகள் பழமையான மிச்சிகன் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது என கூறியுள்ளார். அதேபோல அமுல் டாஸா, அமுல் கோல்ட், அமுல் சக்தி மற்றும் அமுல் ஸ்லிம் அண்ட் தின் ஆகிய நான்கு வகையான பால்களை அமெரிக்க சந்தையில் மக்கள் வாங்கி மகிழலாம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நியூ ஜெர்சி, டலாஸ் , சிகாகோ, நியூயார்க், டெக்சாஸ், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications