'சூப்பர் மில்க்' அறிமுகம் செய்த அமுல்.. போட்டிக்கு ஆவின் வருமா..?

குஜராத்தை சேர்ந்த குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் அமுல் பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமுல் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் அண்மையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமுல் வரவால் தங்களது மாநில கூட்டுறவு அமைப்புகளின் பால் விற்பனை சரியும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

'சூப்பர் மில்க்' அறிமுகம் செய்த அமுல்.. போட்டிக்கு ஆவின் வருமா..?

இது போன்ற எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும், வர்த்தகத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் அமுல் நிறுவனம் தெளிவாக உள்ளது. அமுல் நிறுவனம் தற்போது புதிய தயாரிப்புகள் மூலம் சந்தையை விரிவுப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது பால் உற்பத்தி நிறுவனமான அமுல், 200 மி.லி. பால் பாக்கெட்டில் 30 கிராம் புரதம் கொண்ட சூப்பர் மில்க்கை அறிமுகப்படுத்துகிறது. அமுலின் இ காமர்ஸ் வலைதளம் வாயிலாக இது விற்பனை செய்யப்படும் என்றும் பெட் பாட்டில்கள் அல்லது அட்டைப் பெட்டிகளில் (Tetra pack) இந்த சூப்பர் பால் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்.

இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா கூறுகையில், தற்போது சந்தையில் விற்கப்படும் பாலில் 6 கிராம் மட்டுமே புரதம் உள்ளது. புதிய தயாரிப்பில் (சூப்பர் மில்க்) புரத அளவு 5 மடங்கு அதிகரிக்கப்படும்.

அமுல் ஏற்கனவே அதிக புரதம் கொண்ட லஸ்லி, மில்க் ஷேக்குகள் மற்றும் மோர் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. தனது இ காமர்ஸ் தளம் வாயிலாக அவற்றை விற்பனை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 15-20 கிராம் புரதத்தை கொண்டுள்ளது.

அமகதாபாத், டெல்லி, சண்டிகர், மும்பை, புனே, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் இ காமர்ஸ் சேவைகள் மூலம் அமுலின் தயாரிப்புகள் நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஜெயன் மேத்தா நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றதற்கு முன் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் அமுல் நிறுவனத்தின் வருவாய் 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.55,055 கோடியாக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+