மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்றான பால் விலையை ஜூலை 1 முதல் அதாவது நாளை முதல், லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது அமுல் பிராண்ட்-ன் தாய் நிறுவனமான குஜராத் கூட்டறவு பால் மார்க்கெட்டி அமைப்பு (GCMMF).
அமுல் பால்
இந்த 2 ரூபாய் பால் விலை உயர்வு அமுல் பிராண்ட் கீழ் இருக்கும் அனைத்து பால் வகைகளுக்கும் பொருந்தும், குறிப்பாக கோல்டு, டாசா, சக்தி, டி ஸ்பெஷல், பசும் பால், எருமை பால் என அனைத்து பால் வகைகள் மீதும் விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட உள்ளது என GCMMF அமைப்பு தெரிவித்துள்ளது.
பால் விலை உயர்வு
சுமார் ஒரு வருடம் 7 மாத்திற்கு பின் விலையை உயர்த்தியுள்ள அமுல் நிறுவனம் உற்பத்தி செலவுகள் மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் தவிர்க்க முடியாத நிலையில் தற்போது பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது என GCMMF அமைப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
உணவு பணவீக்கம்
நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தாலும் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம் என GCMMF அமைப்பின் தலைவர் ஆர்எஸ் சோதி தெரிவித்துள்ளார்.
செலவுகள் அதிகரிப்பு
மேலும் இவர் கூறுகையில், கடந்த 1 வருடம் 7 மாதத்தில் பால் பேக்கேஜ் செய்யும் செலவுகள் 30 முதல் 40 சதவீதமும், போக்குவரத்து செலவுகள் 30 சதவீதம், எனர்ஜி செலவுகள் 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.
MRP விலை
இதன் காரணமாக அமுல் பால் பொருட்களின் விலையை 2 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது, அதாவது எம்ஆர்பி (MRP) விலையில் 4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளோம் என GCMMF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வமைப்பின் தலைவர் ஆர்எஸ் சோதி தெரிவித்துள்ளார்.
ரூபாய்க்கு 80 பைசா
மேலும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ள 2 ரூபாய் விலையின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் அளிக்கப்படும், அதாவது GCMMF அமைப்பின் கொள்கை படி ஒவ்வொரு ரூபாய்க்கும் 80 பைசா தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications