நீ தாண்டா டிரைவரு.. AMUL பிராண்டின் சூப்பர் மார்கெட்டிங் ஐடியா.. ஆடிப்போன கார்ப்ரேட் உலகம்..!!

இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான அமுல் வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்டிருக்கும் வேளையில், கடந்த 5 வருடமாக தென்னிந்தியாவில் பால், தயிர் அல்லாமல் பிற முக்கிய பொருட்களை வைத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதேவேளையில் AMUL பிராண்ட் தனது பிற பொருட்களின் வர்த்தகத்தை வட இந்தியாவிலும், பிற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய, புதிய பானியில் விளம்பரம் செய்துள்ளது. இதை இந்தியா முழுவதும் உள்ள மார்கெட்டிங் வல்லுனர்கள் பலரும் பாராட்டி தள்ளுகின்றனர். இப்படி என்ன விளம்பரம்..?

நீ தாண்டா டிரைவரு.. AMUL பிராண்டின் சூப்பர் மார்கெட்டிங் ஐடியா.. ஆடிப்போன கார்ப்ரேட் உலகம்..!!

அமுல் தினமும் 2.6 கோடி பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி எப்படி பிற பொருட்களின் விற்பனையை ஊக்கவிக்க முடியும் என ஆய்வு செய்து வந்த நிலையில் உருவானது தான் இந்த ஐடியா.

பொதுவாக எந்த ஒரு பிராண்டாக இருந்தாலும், தனது பொருட்களை விற்க வேண்டும் என்றால் டிவி, டிஜிட்டல் விளம்பரம், அல்லது நோட்டீஸ், போஸ்டர் வாயிலாக விளம்பரம் செய்யும். ஆனால் அமுல் ஸ்மார்ட்டாக யோசித்து தனது பால் பாக்கெட்-ஐ ஒரு விளம்பர கருவியாக பயன்படுத்தும் ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

அமுல் தனது பால் பாக்கெட்டில், அதிகம் லாபம் தரும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களின் ஆஃபர்கள் குறித்து குறுக்கு விளம்பரம் செய்யும் புதுமையான உத்தியை செயல்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக பிற பொருட்களை மக்களை வாங்கி பயன்படுத்த தனது பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை செய்து வந்த நிலையில், தற்போது விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் ஆஃபர் விளம்பரங்களையும் சேர்த்து கொண்டு வந்துள்ளது.

நீ தாண்டா டிரைவரு.. AMUL பிராண்டின் சூப்பர் மார்கெட்டிங் ஐடியா.. ஆடிப்போன கார்ப்ரேட் உலகம்..!!

இந்த முயற்சி மூலம், மக்களுக்கு ஆவின் தனது Product list-ஐ மொத்தமாக காட்டியது மட்டும் அல்லாமல் மக்களை இத்தகைய புதிய விளம்பர முறைக்கு மெல்ல மெல்ல பழக்கப்படுத்தி வந்துள்ளது. தற்போது விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் ஆஃபர் விளம்பரங்களையும் சேர்த்து கொண்டு வந்துள்ளது.

இத்தகைய விளம்பரத்திற்கு கூடுதல் செலவு இல்லாமல் (பிரிண்டிங் செலவை தவிரி) ஒரு நாளும் 2.6 கோடி இம்ப்ரெஷன்களை உருவாக்குகிறது, இது மார்கெட்டிங் உலகில் எந்தொரு விளம்பர முறைகளின் செலவுகளை காட்டிலும் மிகவும் குறைவானது மற்றும் திறன்வாய்ந்தது என மார்கெட்டிங் வல்லுனர்களே தெரிவித்துள்ளனர்.

நீ தாண்டா டிரைவரு.. AMUL பிராண்டின் சூப்பர் மார்கெட்டிங் ஐடியா.. ஆடிப்போன கார்ப்ரேட் உலகம்..!!

அமுல், தனது பால் பாக்கெட்டுகளின் பேக்கேஜிங்-ல் செய்யப்பட்ட சிறு மாற்றம் அதன் ஐஸ்கிரீம் விற்பனையை மேம்படுத்தும் சாதனையை செய்துள்ளது. பால் ஒரு குறைந்த லாப மார்ஜின் கொண்ட பொருளாக இருந்தாலும், இதை வைத்து அதிக லாபம் தரும் ஐஸ்கீரம்-ஐ விற்பனை உயர்த்தப்பட்டால் இதைவிட பெரிய விஷயம் என்ன இருக்கு சொல்லுங்க.

தினசரி விற்கப்படும் 2.6 கோடி பால்கெட்டில் மூலம் கிடைக்கும் இம்ப்ரெஷன்களில் ஒரு 10 சதவீதத்தை விற்பனையாக மாற்றினால் போதும், ஜாக்பாட் தான். சின்ன கல்லு பெத்த லாபம் என்பது போல் சிறிய ஐடியா பெரிய வருமானத்தை அமுல்-க்கு கொடுத்துள்ளது. இந்த உத்தி, இந்திய சந்தையில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் ஆவின் பாலகம் இதேபோன்று பல்வேறு முயற்சிகளுக்காக பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதில் சில உதாரணமே கீழே உள்ளே புகைப்படம். அமுல் போல் ஆவின்-ம் பிற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்.

நீ தாண்டா டிரைவரு.. AMUL பிராண்டின் சூப்பர் மார்கெட்டிங் ஐடியா.. ஆடிப்போன கார்ப்ரேட் உலகம்..!!

மேலும் அமுல்-ன் இந்த உக்தியை பார்த்து வியந்த மார்கெட்டிங் மற்றும் விளம்பர துறையினர் பால் பாக்கெட்டுகளில் க்யூஆர் கோடு சேர்ப்பதன் மூலம், இம்ப்ரெஷன்களை நேரடி விற்பனையாக மாற்றலாம் என பரிந்துரைக்கிறார். இந்த க்யூஆர் கோடு, மக்களை அமுலின் ஐஸ்கிரீம் விற்பனை தளங்களுக்கு நேரடியாக இணைக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்ற ஐடியாவையும் கொடுத்துள்ளனர்.

இந்த விளம்பர உக்தியை தனியார் பிராண்டுகள் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+