குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமுல் நிறுவனம் வட இந்தியாவில் அதிகளவிலான பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை சந்தையை கொண்டு இருக்கும் நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் பால் மற்றும் தயிர் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கார்நாடக அரசின் டெய்ரி பிராண்டான நந்தினி-ஐ சீர்குலைக்க ஆளும் பிஜேபி சதி செய்வதாக எதிர்கட்சியினர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கார்நாடக அரசு நிறுவனமான நந்தினி-ஐ நம்பி பல கோடி விவசாயிகள், மாடு வளர்ப்பவர்கள் உள்ளனர் என்பதால் இது மக்கள் மத்தியிலும் முக்கியமான விஷயமாக பார்க்க துவங்கப்பட்டு உள்ளது.
எதிர்கட்சி தலைவரான சித்தராமையா கர்நாடகாவில் நுழைய அமுல் ஏற்கனவே முயற்சி செய்தது, ஆனால் எங்களுடைய ஆட்சி அதை தடுத்தது. ஆனால் தற்போதைய கர்நாடக பிஜேபி அரசு வரவேற்றுள்ளது என டிவீட் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து நீங்கள் கர்நாடகா வந்ததன் நோக்கம் கர்நாடகாவுக்கு கொடுப்பதா அல்லது கர்நாடகாவில் இருந்து கொள்ளையடிப்பதா? என்று கேட்டுள்ளார்.

அமுல் நிறுவனம் கடந்த வாரம் பெங்களூரில் கெங்கேரி முதல் வொயிட்பீல்ட் வரையில் பால் மற்றும் தயிர் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த விற்பனையை குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் உடன் இணைந்து விற்பனை செய்வதாக அறிவித்தது முதல் டிவிட்டரில் அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் டிவீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக பால் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெங்களூர் ஹோட்டல் அமைப்பான Bruhat Bangalore Hotels' Association (BBHA), அமுல் நிறுவன பொருட்களை மொத்தமாக தடை செய்துவிட்டு இனி நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே வாங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. .
BBHA தலைவர் பிசி ராவ் கூறுகையில் பெங்களூர் ஹோட்டல்களில் தினமும் 4 லட்சம் லிட்டர் பால், 40000 - 50000 லிட்டர் தயிர் வாங்கப்படுகிறது. ஹோட்டல் அமைப்புகள் போலவே மாநிலத்தில் அனைத்து அமைப்புகளும், மக்களும் நந்தினியை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளையில் கடந்த புதன்கிழமை முதல் #SaveNandini டிவிட்டரில் டிரென்டாகி வருகிறது.



Kannadiga trying to #SaveNandini from cunning Amit Shah, Amul gang#SaveNandini#ನಂದಿನಿನಮ್ಮದು#ನಂದಿನಿಉಳಿಸಿ#drpuneethrajkumar #PRK#ಅಪ್ಪು#appuboss pic.twitter.com/Z3QTQC1w5H
— ಅಭಿರಾಮ ಶಾಂತರಾಮ (@Karnatanjaneya) April 6, 2023


Click it and Unblock the Notifications