சென்னை: அமுல் பிராண்ட் குஜராத் மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமுல் தயாரிப்புகளின் சுவை, தரம் தொடர்ந்து மெயின்டெயின் செய்யப்படுவதால், இந்தியாவில் பலரும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. தற்போது அமுல் நிறுவனம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 'சூப்பர் மில்க்' என்று சொல்லப்படுகிற பாலை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
அமுல் நிறுவனம் சூப்பர் மில்க்கை (Super Milk) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தப் பாலின் ஒவ்வொரு கிளாஸிலும் 35 கிராம் புரதம் உள்ளது என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் சூப்பர் மில்க் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமுல் பால் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட விவரங்களின்படி, 200 மில்லி லிட்டர் பாலில் 3 கிராம் புரதம் உள்ளது. அதே நேரத்தில் ஃபுல் கிரீம் பாலில் 7 கிராம் புரதம் உள்ளது.
அமுல் ஏற்கனவே தனது இ-காமர்ஸ் தளங்களில் லஸ்ஸி, மில்க் ஷேக்குகள், மோர் போன்ற அதிக புரதம் கொண்ட பால் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர வே புரோட்டீன்-ம் ஈகாமர்ஸ் தளத்தில் அறிமுகப்பட்டு உள்ளது, இதில் ஒவ்வொரு ஸ்பூனிலும் 15 முதல் 20 கிராம் வரை புரதம் உள்ளது. அதுமட்டுமின்றி அமுல் நிறுவனம் ஐஸ்கிரீம் போன்றவற்றையும் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் சூப்பர் மில்க் குறித்து பேசிய அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா, "எங்கள் தயாரிப்பான இந்த 'சூப்பர் மில்க்கில்' அதிக அளவு புரதம் உள்ளது. அதனால் தான் சூப்பர் மில்க் என்று அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
CNBC தரவுகளின் படி, அமுல் நிறுவனம் 2023ஆம் ஆண்டில் ரூ.55,000கோடி ஆண்டு வருவாய் ஈட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் ஆர்கானிக் பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் வெல்லம், சர்க்கரை போன்ற பொருட்களும் அடங்கும் என்று மேத்தா கூறியுள்ளார்.
மேத்தா, மேலும் நாங்கள் வெண்ணை, பாலாடைக் கட்டி மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அதிக இந்திய சுவை கொண்ட எங்கள் தயாரிப்புகளை, அமெரிக்காவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். கடந்த, 15 மாதங்களாக பால் விலையை நாங்கள் உயர்த்தவில்லை. இப்போது விலையை உயர்த்தும் திட்டமும் இல்லை என்று மேத்தா கூறியுள்ளார்.
இந்தியாவில் அமுல் மட்டுமல்லாமல் ஆவின் பால் பொருட்களையும் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அதிகம் புரதம் நிறைந்த பால் பாக்கெட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் வேளையில் அமூல் சூப்பர் மில்க் தமிழ்நாட்டுக்கு வருமா..? இதனால் ஆவின் வர்த்தகம் பாதிக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அமுல் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்து பால்வளத்துறை, அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்று கூறியது.
குஜராத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அமுல் நிறுவனம், தற்போது உலக நாடுகள் முழுக்க விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை பலமாக இருக்கிறது. இந்தியாவின் 10.10 டன் மொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாட்டில் சுமார் 4.57 சதவீத பால் உற்பத்தியாகிறது. அமுல் நிறுவனம் இது போன்ற புதிய தயாரிப்பின் வாயிலாக தமிழ்நாட்டில் கால் பதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications