ஐடி வேலை வேண்டாம்! நான் விவசாயத்துக்கே போறேன் !- அமைரா ஃபார்ம்ஸ் 100 ஏக்கரில் விவசாயம்..!

பிரபலமான நகரத்தில் வீடு, நல்ல ஊதியம், முக்கியமான ஒரு துறையில் பணி ஆகியவை கிடைத்தாலும் மனநிறைவு இல்லை என்பது பலரது புலம்பலாக இருக்கிறது.

இருப்பினும் வாழ்க்கை ஓட்டத்திற்காக அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள், மனநிறைவை அளிக்கும் வேலையை தேடி செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர் பற்றிய கதை தான் இது.

ஐடி வேலை வேண்டாம்! நான் விவசாயத்துக்கே போறேன் !- அமைரா ஃபார்ம்ஸ் 100 ஏக்கரில் விவசாயம்..!

ஐடி பணியில் கிடைக்காத மனநிறைவு: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் சவுத்ரி. இவரது தந்தை ஒரு விவசாயி. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐடி பணியில் சேர்ந்துள்ளார். நல்ல ஊதியம் கிடைத்தாலும் மனநிம்மதி கிடைக்கவில்லை.

காரணம் சிறு வயதில் இருந்தே தந்தையின் விவசாயம் சார்ந்த விஷயங்களை கேட்டு வளர்ந்த சந்தீப்பிற்கு , நாம் வேளாண்மை சார்ந்த தொழிலுக்கு மாறினால் தான் மன நிம்மதி கிடைக்கும் என முடிவு செய்துள்ளார்.

2022இல் தொடங்கப்பட்ட அமைரா ஃபார்ம்ஸ்: கொரோனா லாக்டவுன் காலம், வேளாண் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சரியான முடிவெடுக்க சந்தீப்பிற்கு அவகாசம் அளித்தது. 2022இல் ஐடி பணியை கைவிட்ட அவர் பெங்களூருக்கு அருகே சிக்மங்களூரில் 100 ஏக்கர் நிலம் வாங்கி அதன் மூலம் அமைரா ஃபார்ம்ஸ் ( Amyra Farms) என்ற வேளான் சார்ந்த ஸ்டார்ட் அப்-ஐ தொடங்கினார்.

ரசாயனம் கலக்காத வேளாண்மை: தன்னுடைய வேளாண் நிலத்தில் எந்த ஒரு ஆபத்தை விளைவிக்கும் ரசாயனமோ , பூச்சிக்கொல்லியோ இவர் பயன்படுத்துவதில்லை. நீடித்த நிலையான வேளாண் நடைமுறைகளை உறுதியாக பின்பற்றி வருகிறார். தனது நிலத்தில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்கிறார் சந்தீப்.

இரண்டு ஆண்டுகளில் ரூ. 9 கோடியாக உயர்வு: பெங்களூருவில் வசிக்கும் சந்தீப் தானே நிலத்திற்கு சென்று வேளாண் பணிகளில் ஈடுபடுகிறார். இவரது நிலத்தில் இருந்து காஃபி, வெண்ணிலா, மிளகு, கிராம்பு போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி மாட்டு பண்ணை, தேனீ வளர்ப்பிலும் இவர் கால்பதித்துள்ளார். மாட்டு பண்ணை மூலம் தனது நிலத்திற்கு இயற்கையான பசுந்தாள் உரம் கிடைப்பதாக கூறுகிறார். 3 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அமைரா ஃபார்ம்ஸின் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.

அமைரா ஃபார்ம்ஸ்: அமைரா ஃபார்ம்ஸில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பொருட்களே விற்கப்படுகின்றன. முதலில் அமேசான், பிளிப்கார்ட்டில் விற்பனை செய்து வந்தவர், பின்னர் தனி இணையதளம் உருவாக்கி அதிலும் விற்பனை செய்கிறார்.

ஆப்பிள் சிடார் வினிகர் , பாரம்பரிய ம்ஜுறையில் தயார் செய்யப்படும் நெய், தேன் மற்றும் காபி, தேயிலை ஆகியவை இங்கே கிடைக்கும். பெங்களூருவில் கடந்த ஆண்டு இரண்டு காபி கடைகளையும் திறந்துள்ளார். "விளை நிலத்தில் இருந்து நேரடியாக உங்கள் வீட்டில்" என்பதை மந்திரமாக கொண்டு வர்த்தகம் செய்கிறார்.

நீடித்த நிலையான வேளாண்மையே நோக்கம்: முன்பிருந்ததை போல இயற்கை வேளாண்மையை நாம் வாழ்வியலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என கூறும் சந்தீப் , நீடித்த நிலையான வேளாண்மைக்கு ஒரு முன் உதாரணமாக தனது வேளாண் முறைகள் இருக்கும் என்கிறார்.

தனது குடும்பத்தினரே பக்கபலமாக இருப்பதாக கூறும் சந்தீப், அமைரா ஃபார்ம்ஸில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+