என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதிர்ஷ்டம்கிறது வேணும். ஓடி ஓடி உழைச்சாலும் கொஞ்சம் கூட சேமிக்க முடியல. எண்ணெயை தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும் என பலவாறு நம்மூர்களில் தாத்தா பாட்டிகள் சொல்வதை கேட்டிருக்கலாம்.
ஆனால் இந்த சம்பவம் அதெல்லாம் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.அமெரிக்காவினை சேர்ந்த ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசாக விழுந்துள்ளது. இதுவே மறக்க முடியா சம்பவம் எனில், அதே நபருக்கு மீண்டும் 19 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
அதிர்ஷ்டம்ன்னா இப்படி இருக்கணும்..
இரண்டு முறை பரிசு
இப்படி ஒரு அதிர்ஷ்டம் அமெரிக்காவினை சேர்ந்த மில்லர் என்பவருக்கு தான் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த கெவின் பி மில்லர், அறு வருட இடைவெளியில் பெரியளவில் லாட்டரியில் பரிசினை வென்றுள்ளார். அதுவும் இரண்டு பரிசுகளுமே ஒரே கடையில் என்பது இன்னொரு சுவாரஸ்மான விஷயம்.
எவ்வளவு பரிசு தெரியுமா?
கடந்த 2016ம் ஆண்டில் 2016ல் இவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 8 கோடி ரூபாய் ) பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 4,00,000 டாலர்கள் பரிசாக (சுமார் 19 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ளது.
வருடா வருடம் பரிசா?
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், இது வாழ் நாள் முழுவதும் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசினை பெற்றுக் கொள்ளலாமாம். எனினும் கெவின் மில்லர், வாழ் நாள் முழுவதும் பெறுவதற்கு பதிலாக, அவர் மொத்தமாக 3,60,000 டாலர்கள் தொகையினை பெற ஒப்புக் கொண்டுள்ளாராம்.இந்த பரிசினை பாஸ்டனில் உள்ள அந்த மாநில லாட்டரி தலைமையகத்தில் பரிசினை பெற்றுள்ளார்.
2 பரிசும் ஒரே கடையில் தான்
கடந்த பிப்ரவரி மாதத்தில் மில்லர் இந்த கேமில் முதல் ஐந்து எண்களை சரியாக தேர்வு செய்துள்ளார். இந்த வெற்றிக்கான டிக்கெட்டினை அவர் டர்னர்ஸ் ஃபால்ஸில் உள்ள ஃபுட் சிட்டியில் வாங்கியுள்ளார். அவர் முன்னதாக 1 மில்லியன் டாலர் வென்ற அதே கடையில் தான் இந்த முறையும் பரிசினை வென்றுள்ளார்.
மிகப்பெரிய பரிசு
முன்னதாக லண்டனில் அதிர்ஷ்டகரமான ஒருவருக்கு 195 மில்லியன் யூரோவினை பரிசாக வென்றார். இதன் இந்திய மதிப்பு சுமார் 1879 கோடி ரூபாயாகும். இது தான் எல்லா காலத்திலும் மிகப்பெரிய லாட்டரி பரிசாக கருதப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications