காந்தி நகர்: திடீரென முளைத்த மழைக்கால காளான் குடைகள் போல நாடு முழுவதும் புதிது புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இதுபோன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டில் ஏதேனும் தனித்துவம் காட்டினால் கட்டாயம் தொழிலில் வெற்றி அடைந்து கோடிக்கணக்கில் ரூபாயை வருமானமாகப் பெறுகின்றனர்.
அந்த வரிசையில் குஜராத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர், இரு சகோதரிகள் இணைந்து தொடங்கியுள்ள ரெசின் ஓவிய ஸ்டார்ட் அப் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஓவியத்துறையில் இந்தியாவில் ரெசின் பயன்படுத்தி வரையும் கலை இப்போது பிரபலமாகி வருகிறது.
இ-காமர்ஸ், புரொப்-டெக், எஜு-டெக் போன்ற பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்ட போதிலும் ஓவியத்துறையில் மிகக் குறைவாக தொடங்கப்படுகின்றன. இதில் 2020ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்ட துளசி ரெசின் ஸ்டார்ட்அப்பும் அடங்கும்.

துளசி ரெசின் ஸ்டார்ட்அப்பின் உரிமையாளர்களான மூவரும் வெவ்வேறு துறைகளில் திறன் படைத்தவர்கள். இருப்பினும் தங்களது படைப்புகளை ரெசின் ஓவியக்கலையை இந்தியாவில் பிரபலப்படுத்தி வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
ரெசின் ஓவியக் கலையில் இபாக்ஸி ரெசின்களை தங்களது ஓவியங்களில் பயன்படுத்துகின்றனர்.
இரண்டு திரவ மூலப்பொருட்களுடன் ரெசின், ஹார்ட்னர் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து ஓவியத்துக்கான கலையைத் தயாரிக்கின்றனர். அக்ரிலிக், மோல்டுகள், கேன்வாஸ்கள், மர பேனல்களில் இந்த ஓவியங்களை தீட்டுகின்றனர்.
இது வித்தியாசமான அதேநிறத்தில் புது வடிவமான ஓவியங்களாக மிளிர்கின்றன. இவற்றின் கண்ணாடி ஃபினிஷிங் பார்வையாளர்களை மிகவும் கவர்கின்றது. இந்த படைப்புகளை போலியாகத் தயாரிக்க முடியாது.
இந்தியாவில் இப்போதுதான் ரெசின் ஓவியக்கலை வரும்நிலையில் நிறைய ஓவியர்கள் இந்தக் கலைக்கு மாறத் தொடங்கிவிட்டனர். காரணம் இந்தப் படைப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பு.
குஜராத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி கௌரவ் அகர்வால் சிஏ முடித்ததும் தொழில் தொடங்குவதற்கான முனைப்பில் இருந்தார். 3 ஆண்டுகள் ஜவுளித் துறையில் தொழில் தொடங்க முயற்சி செய்து வெற்றி பெற முடியாத நிலையில் தனது சகோதரிகள் பிரியா அகர்வால், யோகியா அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து துளசி ரெசின் ஸ்டோரை தொடங்கினார். இருவரும் எம்பிஏ பட்டதாரிகள்.
ரெசின் ஓவியக் கலையில் துளசி ஸ்டோரின் படைப்புகள் வித்தியாசமாகவும் அட்டகாசமாகவும் இருந்ததால் சட்டென வாடிக்கையாளர்களை கைப்பற்றத் தொடங்கியது.முதல் ஆண்டில் 40 லட்சம் ரூபாயை சம்பாதித்த துளசி ரெசின் இந்தாண்டு எட்டு கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது.
அகர்வால் குடும்பத்தினர் சேர்ந்து ரெசின் ஓவியக்கலையை பிரபலப்படுத்துவதோடு மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்தக் கலையில் ஈடுபட முடியாத கலைஞர்களுக்கு உதவவும் செய்கின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எஸ்டோனியா, கனடா, ஓமன் உள்பட 31 நாடுகளில் துளசி ஸ்டோர் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications