பல்வேறு பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஐடி துறை மந்தநிலையில் இருப்பது ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு காரணமாக முன்வைக்கப்படுகின்றன.
ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பல நிறுவனங்களும் கருணையே இல்லாமல் செயல்படுவது குறித்து ரெடிட் தளத்தில் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் சிலருடைய பணி நீக்க கதை கேட்பவர்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டிருக்கும் பதிவு கேட்போருக்கே கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருக்கிறது.

குர்குவானில் நிதி நிறுவனம் ஒன்றில் நிதி ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்த அந்த நபர் கடந்த ஜூலையில் தான் ஒரு டி2சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாராம். வேலைக்கு சேர்ந்த 2 நாட்களிலேயே திடீரென நிறுவன ஹெச்.ஆர் அழைத்து உங்களை பணிநீக்க, செய்கிறோம் என கூறினார்களாம்.
நாங்கள் இந்த பதவிக்கு மேலும் சில பொறுப்புகளை கூடுதலாக வழங்க இருக்கிறோம், எனவே அதற்கு மேலும் சில ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவரே பொருத்தமாக இருப்பார். எனவே நீங்கள் இதற்கு பொருத்தமற்றவர் என கூறினார்களாம். இதனால் மனமுடைந்து போன அந்த நபர் அதை ஏன் வேலைக்கு எடுத்த 2 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் அதற்கு முன்னரே முடிவெடுத்து இருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
மன ரீதியாக இந்த விஷயம் தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ள அந்த இளைஞர் புதிய தொடக்கத்தை எண்ணி வந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார். தான் ஏற்கனவே வேலை செய்து வந்த நிறுவனத்திலும் தனக்கு மாற்றாக ஒருவரை பணிக்கு தேர்வு செய்துவிட்டனர் எனவே வேலையில்லாம்ல் நிற்கதியாக நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞரின் பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றி உள்ளனர். சிலர் சட்டரீதியாக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் உங்களுக்கு எந்த ஒரு நிதி சார்ந்த இழப்பீடும் வழங்காமல் எப்படி உங்களை உடனடியாக வேலையிலிருந்து நீக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். பலரும் மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர். சிலர் தங்களுக்கு நேர்ந்த பணி நீக்க அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றனர். சிறிய நிறுவனங்கள் மட்டும் கிடையாது பெரிய நிறுவனங்களிலும் கூட தற்போது இதுதான் நிலைமை என சுட்டிக்காட்டி உள்ளனர்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications