உலக அளவில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு அத்தனை எளிதாக வேலைவாய்ப்பு கிடைப்பது கிடையாது. ஐடி துறை மந்த நிலை, ஏஐ வருகை ஆகியவை வேலை வாய்ப்பை குதிரைக்கொம்பாக மாற்றி வைத்திருக்கின்றன.
கேம்பஸ் இண்டர்வியூக்களில் வேலை கிடைத்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைப்பது இல்லை. இந்த சூழலில் தான் ஒரு இளைஞர் தான் எக்ஸ் தளத்தில் போஸ்ட் போடுவதன் மூலம் மட்டுமே இரண்டு மாதங்களில் 67,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக மாறி இருக்கிறது .

21 வயதான பொறியாளர் கனவ் என்ற இளைஞர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பாக விரிவான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . அதில் ஜூலை மாதத்தில் மட்டும் தான் எக்ஸ் தளத்தில் போஸ்ட் போடுவதன் மூலம் 35,000 ரூபாயையும் ஆகஸ்ட் மாதத்தில் 32,000 ரூபாயையும் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார் . அதில் அவருக்கு ஜூலை 5 லிருந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மொத்தமாக 67,420 ரூபாயை எக்ஸ் தளம் அவருக்கு வருமானமாக வழங்கியிருக்கிறது. 5 தவணைகளாக இந்த பணம் என்பது செலுத்தப்பட்டிருக்கிறது . எக்ஸில் போஸ்ட் போடுவதன் மூலமே எனக்கு ஒரு கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் என்ன சம்பளத்துடன் வேலை கிடைக்குமோ அது கிடைத்து வருகிறது நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இதை தொடங்கினேன் ஆனால் இதுவே எனக்கு நல்ல வருமானம் தருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார் .
இவர் தனது கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் வரக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் தான் சம்பளமாக வழங்குகின்றன , அதிகபட்சமாக ஒரு சிலருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் கூட வேலை கிடைக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் கண்டண்ட் கிரியேஷன் தனக்கு அதைவிட அதிக வருமானம் தருகிறது என கூறுகிறார்.
எக்ஸ் தளத்தை பொறுத்தவரை தகுதி வாய்ந்த கிரியேட்டர்களுக்கு ஒரு கணிசமான தொகையை வருமானமாக வழங்கி வருகிறது. இதற்கு ஆக்டிவான ப்ரீமியம் கணக்கு வைத்திருக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களில் 5 மில்லியன் ஆர்கானிக் இம்ப்ரேஷன்கள் பெற்றிருக்க வேண்டும். 500 வெரிஃபைடு ஃபாலவர்களையாவது பெற்று இருக்க வேண்டும். இதில் நாம் போடும் போஸ்ட் எப்படி ரீச் ஆகிறதோ அதன் படி பணம் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications