டெல்லி: வங்கிகளில் செய்யப்படும் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கான டிடிஎஸ் (TDS) வரி வரம்பை அரசு உயர்த்தியுள்ளது.
வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு வட்டியும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் வட்டியானது காலாண்டு தோறும் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைத்தால் வங்கிகள் டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரி என்ற நடைமுறையில் வட்டியில் 10 சதவீதம் தொகையை கழித்துவிடுகின்றன. வாடிக்கையாளரின் பான் எண் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் 10 சதவீத வரியும், பான் எண் விவரங்கள் இல்லையென்றால் 20 சதவீத தொகையும் பிடித்தம் செய்யப்படும்.
இந்நிலையில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி அறிவித்துள்ளார். இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் நிதியாண்டு முதல் நிலையான வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், 50 ஆயிரம் ரூபாயை கடந்தால் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகையை வங்கிகள் குறிப்பிட்ட வாடிக்கையாளரின் பான் எண்ணில் வங்கிகள் இருப்பு வைத்துவிடும். நாம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் போது டிடிஎஸ் தொகையை குறிப்பிட்டு அந்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
அதே போல 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. இவ்வாறு மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் வந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த டிடிஎஸ் வரம்பையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி மூத்த குடிமக்கள் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை வைத்திருந்தால் அதன் வட்டி வருமானம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த புதிய வரி மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
story written-devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications