பெங்களூரு - சென்னை இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது கர்நாடகா பகுதியில் அமைந்திருக்கும் 72 கிலோ மீட்டர் தொலைவிலான பணிகள் முடிவடைந்து இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் பிரதான நகரங்களான பெங்களூரு மற்றும் சென்னைக்கு இடையிலான பயண நேரத்தை ஆறு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரங்களாக குறைக்கும் வகையில் இரண்டு நகரங்களுக்கும் இடையே எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் ஜின்னகரா என்ற பகுதியில் மட்டும் சாலை போடுவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. அந்த பகுதியில் இருக்கும் கிராம மக்கள் இந்த சாலை வழியில் அமைந்திருக்கும் குட்டம்மா கோவிலை விடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கிராம மக்களுக்கும் இந்திய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் மாநில நிர்வாகமும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் இந்தப் பகுதி மக்களின் மக்களை சமாதானப்படுத்தி ஒரு வழியாக இங்கே கோயிலை இடமாற்றம் செய்து அந்த பகுதியில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் பணிகள் முடிவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த எக்ஸ்பிரஸ்வேயானது தற்போது செயல்பாட்டில் இருக்கும் டாபாஸ்பேட் முதல் போஸ் கோட் வரை உள்ள சாட்டிலைட் டவுன் ரிங் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ்வே கர்நாடகாவில் மாலூர் பகுதியில் தொடங்கி பெதமங்களா பகுதியில் முடிவடைகிறது.
இந்த தொலைவினை வாகன ஓட்டிகள் 40 நிமிடங்களில் கடந்து விடலாம் என சொல்லப்படுகிறது. சாலை பணிகள் முடிந்தாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக இதுவரை திறக்கப்படவில்லை.
இந்த எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிராம மக்கள் சென்று வர ஏதுவாக சிறு சிறு பாதைகளை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோல சில பகுதிகளில் மேம்பாலம் கட்டமைக்கும் பணிகளும் நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது நான்கு வழிச்சாலையாக பெங்களூர் சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ்வே கட்டப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் ஆறு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரங்களாக குறைந்துவிடும்.
இந்த சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும் . நடப்பாண்டு இறுதிக்குள்ளேயே இந்த எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story Written by: Devika
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications