விண்வெளி தொழில் நுட்பத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரக்கூடிய இந்தியா 40 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய வீரர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. ஆக்ஸியம் - 4 என்ற திட்டத்தின் மூலம் இந்தியரான சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்கு செல்ல இருக்கிறார்.
ஆக்ஸியம் -4 திட்டம்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமும் ஆக்ஸியம் நிறுவனமும் இணைந்து கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்தை அனுப்பின. உலகின் முதல் தனியார் விண்கலமாக அப்போது அது இருந்தது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஆக்ஸியம் - 4 திட்டம் நாளை செயல்படுத்தப்பட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலமானது நாளை ஏவப்பட இருக்கிறது.

இந்திய வீரரும் பயணம்: இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் பயணம் செய்ய இருக்கிறார்கள். இந்திய விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார் . ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லக்கூடிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை சுக்லாவுக்கு கிடைத்திருக்கிறது.
விண்வெளி செல்லும் 2ஆவது வீரர்: 28 மணி நேர பயணத்திற்கு பிறகு இந்த விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்றும் இந்த நான்கு வீரர்களும் 14 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த 1984 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா பயணம் செய்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றொரு வீரரை விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறது.
யார் இந்த சுபான்ஷூ சுக்லா ?: 40 வயதாக கூடிய இவர் இஸ்ரோவால் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் இந்திய விமானப்படையில் சேர்ந்தார் 2024 ஆம் ஆண்டில் குரூப் கேப்டனாக பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ ககன்யான் எனப்படும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக தொடங்கப்பட்ட திட்டத்திற்காக சுக்லாவை ஒரு வீரராக தேர்வு செய்தது.
கல்வித்தகுதி: சுக்லா ஐஐஎஸ் சி பெங்களூருவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் எம்டெக் படிப்பை முடித்து இருக்கிறார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் இளநிலை படிப்பை முடித்துள்ளார். Su-30 MKI, MiG-29, Jaguar, Hawk ஆகிய விமானப்படை விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உண்டு. 2,000 Flight hours கொண்ட இந்திய வீரர் என்ற பெருமை கொண்டவர். 2019 ஆம் ஆண்டு ககன்யான் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் .
எங்கு பயிற்சி பெற்றார்: ரஷ்யாவின் யுரி ககாகரி பயிற்சி மையத்தில் விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதனை அடுத்து நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் விண்வெளி மையத்தில் தீவிர பயிற்சிக்கு சென்றார். 2026 ஆம் ஆண்டில் தான் ககன்யான் திட்டத்தை இந்தியா நிறைவேற்ற இருக்கிறது .ஆனால் அதற்கு முன்னதாகவே ஆக்ஸியம் -4 திட்டம் மூலம் இவர் விண்வெளிக்கு செல்கிறார்.

சுக்லாவுடன் யாரெல்லாம் செல்கின்றனர்?: ஆக்ஸியம் நிறுவனம், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த ஆக்ஸியம் 4 திட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஜூன் 11ஆம் தேதி இந்த திட்டத்தில் விண்கலத்தை இயக்கும் விமானியாக சுக்லா செல்ல இருக்கிறார். அவரோடு அமெரிக்க வீரர் கமாண்டராகவும் போலந்து மற்றும் ஹங்கேரி நாட்டு வீரர்கள் திட்ட நிபுணர்களாகவும் பயணம் செய்கின்றனர்.
சுக்லாவின் பணி என்ன?: விண்கலத்தை இயக்கும் பொறுப்பு முழுவதுமாக சுக்லாவிடமே இருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்டு விண்வெளிக்கு சென்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் வரை விண்கல இயக்கத்திற்கு இவரே பொறுப்பு. சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 14 நாட்களுக்கு விண்வெளி மையத்தில் தங்க உள்ளனர். அங்கே கிட்டத்தட்ட 60 வகையான ஆய்வுகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
என்ன ஆய்வு செய்கிறார்?: சைனோ பாக்டீரியா எனப்படும் ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய ஒரு வகையான நீர் வாழ் பாக்டீரியா குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் சுக்லா. விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. இஸ்ரோ சார்பில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சி விகிதம் செல்களின் செயல்பாடு குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் விண்வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான சூழல்கள் குறித்த ஆய்வுக்கு இந்த பாக்டீரியா ஆய்வு மிகவும் முக்கியமாகும்.
வரலாறு படைக்க போகும் சுக்லா:அதேபோல விண்வெளி நுண்ணுயிரி பாசிகள் குறித்தும் சுக்லா ஆய்வு செய்ய இருக்கிறார் .எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்களுக்கு உணவு எரிபொருள் உள்ளிட்ட தேவைக்காக இது மிகவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி மாணவர்களோடு கலந்து உரையாடுவது உள்ளிட்ட பணிகளையும் சுக்லா மேற்கொள்வார் என ஆக்ஸியம் நிறுவனம் தெரிவித்துள்ளது
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications