உலகின் கவனத்தை ஈர்த்த அதானி.. பெரும் செல்வத்தினை ஈட்டுவதில் ஒரு இந்தியர்.. இவர் தான் டாப்பு..!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பில்லியனர் ஆன கெளதம் அதானி, இந்தியாவில் மட்டும் அல்ல, உலக பணக்காரர்கள் பட்டியலிலும் மிக வேகமாக முன்னேறி வருகின்றார்.

அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, பல துறைகளிலும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.

தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றார். குறிப்பாக எதிர்காலத்தின் தேவை அறிந்து அதற்கேற்ப முதலீடுகளை செய்து வருகின்றார்.

முக்கிய இடம்

முக்கிய இடம்

பற்பல புதிய புதிய துறைகளிலும் காலடி வைத்து வருகின்றார். நடப்பு நிதியாண்டில் செல்வத்தை அதிகரித்த, இந்திய பணக்காரர்களில் அதானிக்கு முதல் இடம் எனலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் சொத்து சேர்ப்பதில் நடப்பு நிதியாண்டில் அதானி முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அதானி குழும பங்குகள் உச்சம்

அதானி குழும பங்குகள் உச்சம்

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல்வேறு டெக் நிறுவனங்களும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களும் கூடசெலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. அப்படி இருக்கையில் உலகின் பல பெரிய பெரிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கூட சரிவினைக் கண்டு வருகின்றன. ஆனால் அதானி குழும பங்குகள் விலை புதிய உச்சத்தினை எட்டியுள்ளன.

அதானியின் சொத்து மதிப்பு

அதானியின் சொத்து மதிப்பு

நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரையில் அதானியின் சொத்து மதிப்பில் 59.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இந்த இந்திய தொழிலதிபர் உலகின் 3 பெரிய பில்லியனராகவும் உள்ளார். நவம்பர் 11, 2022 நிலவரப்படி, ப்ளூம்பெர்ம் பில்லியனர் பட்டியலின் படி இவரின் சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.

தொடர் ஏற்றத்தில் பங்குகள்

தொடர் ஏற்றத்தில் பங்குகள்

நடப்பு ஆண்டில் இதுவரையில் அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது 261% அதிகரித்து, 360.10 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2021ல் 99.75 ரூபாயாக இருந்தது.

இதே அதானி எண்டர்பிரைசஸ் நிறுனத்தின் பங்கு விலையானது 135% அதிகரித்தும், அதானி டோட்டல் கேஸ்-ன் பங்கு விலையானது 122% அதிகரித்தும் காணப்பட்டது.

100% கீழாக ஏற்றம்

100% கீழாக ஏற்றம்

அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 90% வரையில் அதிகரித்தும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 65% வரையில் குறைந்தும், அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்னாமியின் பங்கு விலையானது 22% வரையில் அதிகரித்தும், அதானி வில்மர் பங்கு விலையானது 193% அதிகரித்தும் காணப்படுகின்றது. இப்பங்கானது கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விலை 230 ரூபாயாகும்.

மற்ற பில்லியனர்கள்

மற்ற பில்லியனர்கள்

உலகின் 31 பணக்காரர் ஆன Susquehanna குழுமத்தின் ஜெஃப் யாஸ், நடப்பு காலாண்டில் அவரது மொத்த நிகர மதிப்பில் 29.6 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

இதே உலகின் 20வது பணக்காரரான ஜாங் யிமிங் மற்றும் 95வது பணக்காரரான ரோடால்ப் சாட் & அவரின் குடும்பம், நடப்பு ஆண்டில் 10.41 பில்லியன் டாலர் மற்றும் 4.49 பில்லியன் டாலர் உயர்வை கண்டுள்ளது.

 எலான் மஸ்க்கின் சொத்து சரிவு

எலான் மஸ்க்கின் சொத்து சரிவு

மறுபுறம் உலகின் முதல் பில்லியனர் ஆன எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பானது, நடப்பு ஆண்டில் 86.60 டாலர்கள் குறைந்து, 184 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. டெஸ்லா பங்கின் விலையானது கடுமையான சரிவினைக் கண்ட நிலையில், இந்த அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. நடப்பு ஆண்டில் டெஸ்லா பங்கின் விலையானது 52% வீழ்ச்சி கண்டுள்ளது.

மற்ற பில்லியனர்கள் சரிவு

மற்ற பில்லியனர்கள் சரிவு

எலான் மஸ்க் மட்டும் அல்ல, இந்த பட்டியலில் LVMH Moet-ன் தலைவர் ஹென்னெஸ்ஸி லூயிஸ் உயிட்டன் பெர்னாட்ட் அர்னால்ட், இவரின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலரும், ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரின் மொத்த நிகர மதிப்பு முறையே 72.70 பில்லியன் டாலர், 26.20 பில்லியன் டாலர், 3.03 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+