கலிபோர்னியா: அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.. இந்த விவகாரம் தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தவர். அவர் அமெரிக்க காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் . இந்த தகவல் முகமதுவின் தந்தைக்கு வியாழக்கிழமை அன்று தான் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து முகமதுவின் குடும்பத்தினர் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில் அமெரிக்க காவல்துறையினர் எங்கள் மகனை சுட்டுக் கொன்று விட்டதாக தெரிவித்திருக்கின்றனர் , மருத்துவமனையில் அவரது உடலை வைத்திருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர் அவரை சுட்டதற்கான காரணத்தை எங்களிடம் கூறவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
முகமதுவின் நண்பர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் தங்கியிருந்த அறையில் உடன் இருந்த நபருக்கும் முகமதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் லேசான கைகளப்பில் முடிந்ததாகவும் கூறியதாக உறவினர்கள் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
ஏசி தொடர்பாக முகமதுவுக்கும் அவருடன் அறையில் தங்கி இருந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவருக்கும் இடையே மோதல் உண்டாகி கத்தியை கொண்டு இருவரும் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இதனை அடுத்து காவல்துறையினருக்கு அந்த அறைக்கு சென்றார்களாம். அப்போது இருவரிடமும் கையில் இருக்கும் பொருளை காட்ட சொன்னதாகவும் ஒரு நபர் காட்டியதாகவும் முகமது காட்ட மறுத்ததால் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினர் முகமதுவை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றனர். எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அமெரிக்க காவல்துறையினர் இப்படி உடனடியாக சுட்டுக் கொல்வார்களா என முகமதுவின் பெற்றோரும் உறவினர்களும் வேதனையில் ஆழ்ந்திருக்கின்றனர் . மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகமதுவின் உடலை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் .
இதற்கிடையே அமெரிக்காவில் சாண்டா கிளாரா மாவட்ட காவல் துறையினர் இந்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கின்றனர் . 30 வயதாகக்கூடிய முகமது நிஜாமுதீன் தன்னுடைய லிங்குடிங் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் இனரீதியாக பணியிடத்தில் தன்னை பலரும் விருது ஒதுக்கினர் என பதிவு செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
கூகுள் நிறுவனத்தில் தான் வேலை செய்தபோது இனரீதியான வெறுப்பு, இன ரீதியான பாகுபாடுகளுக்கு ஆளானேன் எனக் கூறியிருக்கிறார். வேண்டுமென்றே என்னை பணியில் இருந்து நீக்கினார்கள் என சுட்டி காட்டி இருக்கும் அவர் என்னுடைய உணவில் விஷம் வைத்தனர், நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து தற்போது என்னை வெளியேற வைக்க பல்வேறு சதி வேலைகளை செய்கிறார்கள் என பதிவு செய்திருக்கிறார்.
உடன் வேலை செய்தவர்கள் என்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் என அனைவருமே எனக்கு எதிராக இருக்கின்றனர். எனக்கு நடந்த இந்த விஷயம் நாளை யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம் என அவர் பதிவு செய்திருக்கிறார். இதற்கிடையே அவர் சுட்டு கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications