தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை, 28% வரை ஏற்றம் காணலாம் என்று ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது.
இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியறிக்கையில், ICICI bankகின் தற்போதைய விலை 407 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 503 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. இதே மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இதன் இலக்கு விலையை 525 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது முந்தைய கணிப்பில் 496 ரூபாயாக கணித்திருந்த நிலையில், தற்போது அதனை உயர்த்தியுள்ளது. இது ஐசிஐசிஐ வங்கி தனது இரண்டாவது காலாண்டினை வெளியிட்டுள்ள நிலையில் வந்துள்ளது.
ஆறுமடங்கு அதிகரித்த லாபம்
ஏனெனில் ஐசிஐசிஐ வங்கியின் நிகரலாபம் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் காலாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஆறு மடங்கு லாபம் அதிகரித்து, 4,251.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் வெறும் 655 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்டையை கிளப்பிய டெபாசிட் விகிதம்
இவ்வங்கியில் மொத்த டெபாசிட் விகிதம் 20 சதவீதம் அதிகரித்து 8,32,936 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கரண்ட் அக்கவுண்ட் மற்றும் சேமிப்பு கணக்குகளின் டெபாசிட் சராசரி விகிதம் 17% வளர்ச்சி கண்டுள்ளது. இதே டெர்ம் டெபாசிட்களின் விகிதம் 26% வளர்ச்சி கண்டுள்ளது.
கடன் வளர்ச்சி
இதே உள்நாட்டு கடன்களின் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10% அதிகரித்தும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4% அதிகரித்தும் காணப்படுகிறது. இதே சில்லறை கடன்களின் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 13% அதிகரித்தும், இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகரித்தும் காணப்படுகிறது.
வாராக்கடன் வீழ்ச்சி
இதே செயல்படாத சொத்துகளின் மதிப்பு (வாராக்கடன்) 1.23%ல் இருந்து 1% ஆக குறைந்துள்ளது. செயல்படாத சொத்துகளின் மதிப்பானது 38,989 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 45,638 கோடி ரூபாயாக இருந்தது. இதே மொத்த வாரக்கடனின் மதிப்பானது செப்டம்பர் காலாண்டில் 5.17% ஆகவும், இதே கடந்த காலாண்டில் 6.37% ஆகவும் இருந்தது. எனினும் இந்த காலாண்டில் வங்கி மோசமான கடன்கள் என 3,017 கோடி ரூபாயினை மதிப்பிட்டுள்ளது.
வட்டி வருவாய் அதிகரிப்பு
இதன் நிகர வட்டி வருவாய், அதாவது அதன் கடன் நடவடிக்கைகளில் இருந்து சம்பாதிக்கும் வட்டி வருமானத்திற்கும், வைப்பு தொகையாளர்களுக்கு வங்கி செலுத்தும் வட்டிக்கும், உள்ள வித்தியாசம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகரித்து, 9,366 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் தொகையானது 3.57 சதவீதமாகவும் உள்ளது


Click it and Unblock the Notifications