நல்ல சான்ஸ்.. 10 – 50% லாபம் கொடுக்கலாம்.. பங்குகளை பட்டியலிட்ட நிபுணர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த செப்டம்பர் காலாண்டில் பல நிறுவனங்கள் நேர்மறையான வருவாயினை கண்டு வரும் நிலையில், பொருளாதாரம் மீண்டு வருவதனையே சுட்டிக் காட்டுகின்றது.

இதற்கிடையில் தரவு நிறுவனங்களும் 2023ம் ஆண்டிற்கான கணிப்புகளை, நேர்மறையாக கொடுக்க ஆரம்பித்துள்ளன.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே கார்ப்பரேட்டுகளின் வருவாய் எதிர்பார்ப்புகளை விட, செலவு குறைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சற்றே ஆறுதல் கொடுத்தது. இதே இரண்டாவது காலாண்டில் நல்ல விதமாகவே வளர்ச்சி விகிதத்தினை பதிவு செய்து வருகின்றன என்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் தலைமை முதலீட்டு அதிகாரி கூறியுள்ளார்.

இனி பணம் போட்டாலும், எடுத்தாலும் கட்டணம்.. மக்கள் கவலை..! #BOB #ICICI #AXISBank

நல்ல வளர்ச்சி
 

நல்ல வளர்ச்சி

பெஞ்ச்மார்க் குறியீடுகள் கடந்த மார்ச் 23ல் இருந்த குறைவான விலையிலிருந்து, 55 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளன. கடந்த சில வாரங்களாக பல துறைகள், நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து தேவை மீண்டு வந்து கொண்டுள்ளது. எனினும் நகர்புறங்களிலும் இந்த தேவையானது விழாக்கால பருவத்தில், மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வளர்ச்சியினை சுரண்டி விட்டது

கொரோனா வளர்ச்சியினை சுரண்டி விட்டது

எனினும் கொரோனாவினால் இந்திய நிறுவனங்கள் செயல்பாட்டு ரீதியாக மெலிந்துள்ளன. பணப்புழக்கம் குறைந்துள்ளது. கொரோனா நிறுவனங்களின் வளர்ச்சியினை சுரண்டி விட்டது. எனினும் தற்போது நிறுவனங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கிவிட்டன. ஆக இது வருவாயில் அடுத்து வரும் காலாண்டுகளில் மீண்டு வரும். இது காலாண்டு வருவாயில் மட்டும் அல்ல நீண்டகால வருவாயும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 31 பங்குகளை பரிந்துரைத்த நிலையில், அந்த பங்குகள் மீண்டும் அடுத்த ஆண்டில் 10 - 50 சதவீதம் ஏற்றம் காணலாம் என்றும் மணிக் கன்ட்ரோல் அறிக்கை கூறுகின்றது. சரி அப்படி என்ன பங்கினைத் தான் நிபுணர்கள் கொடுத்துள்ளார்கள், வாருங்கள் பார்க்கலாம்.

பங்குகளின் இலக்கு
 

பங்குகளின் இலக்கு

 • ஜே கே டயர்ஸின் இலக்கு விலையானது 100 ரூபாயாகும். தற்போது இதன் விலை 68.60 ரூபாயாகும். இதன் விற்பனை 20 - 2023ம் நிதியாண்டில் 7.7 சதவீதம் விற்பனையனை காணலாம். சிஏஜிஆர் 47.6 சதவீதமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 • பேங்க் ஆப் பரோடாவின் இலக்கு விலை 55 ரூபாய்,
 • ஆர்பிஎல்லின் இலக்கு விலை ரூ.230
 • persistent system இலக்கு விலை ரூ.1,520
 • இந்தஸ்இந்த் வங்கி இலக்கு விலை ரூ.750

Suven பார்மாமெடிக்கல்ஸ் இலக்கு விலை ரூ.400

 • ஆக்ஸிஸ் வங்கி இலக்கு விலை ரூ.620
 • பஜாஜ் பின்செர்வ் இலக்கு விலை ரூ.7000
 • லாரஸ் ஆய்வகங்கள் (Laurus labs) இலக்கு விலை ரூ.400
 • அதுல் (Atul) இலக்கு விலை ரூ.7500
 • மகேந்திரா சிஐஇ ஆடோமோட்டிவ் இலக்கு விலை ரூ.170
 • பஜாஜ் ஆட்டோ இலக்கு விலை ரூ.3570
 • எவ்வளவு ஏற்றம் காணலாம்

  எவ்வளவு ஏற்றம் காணலாம்

  • மாரிக்கோ இலக்கு விலை ரூ.440
  • ஹீரோ மோட்டோகார்ப் இலக்கு விலை ரூ.3450
  • ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இலக்கு விலை ரூ.495
  • லார்சன் & டூப்ரோ இன்ஃபொடெக் இலக்கு விலை ரூ.3570
  • டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ் இலக்கு விலை ரூ.5964
  • மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் இலக்கு விலை ரூ.430
  • கிரானுல்ஸ் இந்தியா (granules india) இலக்கு விலை ரூ.459
  • எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் இலக்கு விலை ரூ.920
  • சென்சார் டெக்னாலஜி இலக்கு விலை ரூ.210
  • மியூசிக் பிராட்காஸ்ட் இலக்கு விலை ரூ.25
  • பஜாஜ் பைனான்ஸ் இலக்கு விலை ரூ.3850
  • பிபிசிஎல் இலக்கு விலை ரூ.412
  • Mphasis இலக்கு விலை ரூ.1600
  • ஹெவல்ஸ் இந்தியா இலக்கு விலை ரூ.835
  • சோலமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் இலக்கு விலை ரூ.310
  • அல்ட்ராடெக் சிமெண்ட் இலக்கு விலைரூ.5179
  • கோல்கேட் பால்மோலிவ் இலக்கு விலை ரூ.1700
  • Subros இலக்கு விலை ரூ.310
  • ஏசியன் பெயிண்ட்ஸ் இலக்கு விலை ரூ.2440

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Analysts upgrade 31 stocks to buy, can return 10 -50%

  Analysts upgrade 31 stocks to buy, its can return 10 -50% return in next year
  Company Search
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X