இந்தியாவின் இருபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களாக அதானி குழுமம், ரிலையன்ஸ் குழுமம் உள்ளது. இந்த குழுமங்களின் வாரிசுகள் தான் ஆனந்த் அம்பானி மற்றும் கரண் அதானி. ஏற்கனவே இரு குழுமங்களும் தங்களது வாரிசுகளை வணிக பொறுப்பினை கொடுத்து முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளது.
தற்போது மகராஷ்டிரா அரசும் இந்த இரு பெரும் சாம்ராஜ்ஜியங்களின் வாரிசுகளுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.
மாநில பொருளாதார ஆலோசனை குழு
சில தினங்களுக்கு முன்பு டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் தலைமையில் மாநில பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த குழு மகாராஷ்டிரா அரசின் பொருளாதாரத்தினை மேன்மைபடுத்த முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஷிண்டே கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஆனந்த் அம்பானி & கரண் அதானி
இந்த 1 டிரில்லியன் டாலர் மாநில பொருளாதார ஆலோசனை குழுவில் பல முக்கிய பிரபலங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த அட்வைசரி குழுவில் பல முதல்வர் அலுவலகத்தின் தகவல்கள் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மகள் கரண் அதானியும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாருக்கு என்ன துறை?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆனந்த் அம்பானி, மின் துறையையும், அதானி போர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரண் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை முன்னிலைப்படுத்துவார் என்றும் CMO அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 பேர் அடங்கிய குழு
இதற்கிடையில் 21 பேர் அடங்கிய இந்த பொருளாதார குழுவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தலைமை தாங்குவார் என்றும் தெரிகிறது.
இவர்கள் தவிர இந்த ஆலோனை குழுவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா, பெயின் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குமர் அமித் சந்திரா, தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விக்ரம் லிமாயே உள்ளிட்ட சிலரும் அடங்குவர்.
இன்னும் யாரெல்லாம்?
இது தவிர லார்சன் அண்ட் டூப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ் என் சுப்ரமணியன், சன் பார்மா நிர்வாக இயக்குனர் திலீப் சங்வி, மஹிந்திரா & மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா மற்றும் பத்வே இன்ஜினியரிங் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ காந்த் பத்வே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எதில் கவனம்
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்துப்படி, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும். இது விவசாயம், கல்வி, வங்கித்துறை தொடர்பான பிரச்சனைகளில் இந்த குழு கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக முதல்வர் மாநிலத்தின் பொருளாதாரத்தினை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலரை எட்ட இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியிருந்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications