இந்தியாவின் பிரபல வாகன வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆனந்த் குழுமம் நடப்பாண்டிலேயே தங்கள் நிறுவனத்தில் கூடுதலாக 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனம் மற்றும் எஸ்யூவி வாகனங்களுக்கான பாகங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆனந்த குழுமம் 3600 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட வாகன பாகங்களை தயாரிப்பதற்காக ஒதுக்கீடு செய்தது. இதன் ஒரு பகுதியாக தான் 600 கோடி நடப்பாண்டில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் அதிநவீன மற்றும் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்த வரும் தொழில்நுட்பங்களை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்வது, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு கொண்டு வருவது ஆகியவையே தங்களின் நோக்கம் என ஆனந்த் குழுமம் கூறியுள்ளது.
இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸுக்கு பேட்டி அளித்துள்ள ஆனந்த் குழுமத்தின் தலைவரான மகேந்திர கோயல் தங்கள் குழுமத்தை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது எஸ்யூவி கார்களுக்கு தேவையான வாகனங்களை பெருமளவில் சப்ளை செய்து வருகின்றன எனக் கூறியுள்ளார்.
எஸ்யூவி கார் பாகங்களின் தேவை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்போது தங்கள் நிறுவனம் உயர் தரமான எலக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் சிஸ்டம்களை தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் கேப்ரியல் இந்தியா என்ற தங்களுடைய துணை நிறுவனத்தின் வாயிலாக எஸ்யூவி பிரிவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களுக்கு தேவையான தெர்மல் சிஸ்டம்களையும் ஆனந்த் குழுமத்தின் கிளை நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இதன் மூலம் ஆனந்த் குழுமத்திற்கு தங்களுடைய வருமானத்தில் 35 சதவீதம் எஸ்யூவி கார்களுக்கான பாகங்களை தயாரிப்பதன் மூலமே வருகிறது.
இது ஐந்தாண்டுகளுக்கு முன்பு 20 சதவீதமாக இருந்து தற்போது 35 சதவீதம் என வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் சற்று குறைந்து இருந்தாலும் அடுத்து வரும் காலங்களில் எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலமாக இருக்கும் என ஆனந்த் குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை, எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. நாட்டில் வாகன உற்பத்தி பிரிவில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கெல்லாம் தற்போது பாசிட்டிவாகவே இருக்கிறது என மகேந்திர கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications