இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ் குழுமத்தின் ஆடம்பக்கட்டத்தில் இருவ்து அம்பானி குடும்பத்துடன் நெருங்கி பழகியவர் ஆனந்த் ஜெயின்.
முகேஷ் அம்பானி உடன் பிடித்தவர் என்பது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு மத்தியில் விரிசல் வரவும் ஆனந்த் ஜெயின் தான் காரணம் என பலருக்கும் கூறப்படும் இதே வேளையில், திருபாய் அம்பானியின் 3வது மகனாக வளம் வந்தவர் இந்த ஆனந்த் ஜெயின்.

ஜெய் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் ஜெயின் சுமார் 30 வருடம் வர்த்தக துறையில் அனுபவம் கொண்டவர், ஆனந்த் ஜெயின் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், கேப்பிடல் மார்கெட்-ல் அதிகப்படியான அனுபவம் கொண்டவர்.
2007 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்திற்கு வந்தது மூலம் ஆனந்த் ஜெயின் இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது இந்திய ஆன்லைன் கேமிங் சந்தையை கலக்கும் டிரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஹர்ஷ் ஜெயின், ஆனந்த் ஜெயினின் ஓரே மகன் ஆவார்.
1980 களில் இருந்து ரிலையன்ஸ் குழுமத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஜெயின், திருபாய் அம்பானி இந்திய டெலிகாம் சந்தையில் 500 ரூபாய்க்கு செல்போன் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் தினசரி ஆப்ரேஷன்களை வழிநடத்தியவர் ஆனந்த் ஜெயின்.
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய பதவிகளில் இல்லையென்றாலும் ரிலையன்ஸ் உயர்மட்ட நிர்வாக குழுவில் டைரெக்டர் பதவியிலும், Sir H. N. Reliance Foundation Hospital and Research Centre நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் உள்ளதாக தெரிகிறது.
2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனில் அம்பானி Indian Petrochemicals Corporation Limited-ன் சேரமன் மற்றும் டைரக்டர் பதவியில் இருந்து ஆனந்த் ஜெயின் உடனான கருத்து முரண்பாடு காரணமாக பதவி விலகினார்.
இதன் பின்பு அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மத்தியிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜூன் 2005ல் ஆனந்த் ஜெயின் நிர்வாக குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக செய்தி வெயினாலும் ஜூலை மாதம் IPCL நிர்வாக குழுவில் அவர் இருப்பதாக அறிவிப்பு வெளியானது
Indian Petrochemicals Corporation Limited அரசு நிறுவனமாக இருந்தாலும், மத்திய அரசின் Disinvestment திட்டத்தின் கீழ் பல கட்டத்திற்கு பின்பு 2007ல் IPCL நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைக்கப்பட்டது.
தற்போது ஆனந்த் ஜெயின் உடைய ஜெய் கார்ப் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து Navi Mumbai SEZ (5,250 ஏக்கர்) மற்றும் Mumbai SEZ (5,000 ஹெக்டர்) திட்டத்தை உருவாக்கியுள்ளது. மும்பையில் உள்ள Rewas Port ரிலையன்ஸ் கூட்டணியில் ஜெய் கார்ப் உருவாக்கி வருகிறது.
இதை தொடர்ந்து ஆனந்த் ஜெயின் தலைமையில் சுமார் 820 மில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் Urban Infrastructure Venture Capital நிறுவனத்தை இயங்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications