ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் அரசு அலுவலகம், வீடுகள் நிறைந்த பகுதி என அனைத்து விதமான இடத்திலும் தாக்குதலை அதிகரித்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் உக்ரைன் போரில் கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நவீன் மரணத்திற்குப் பின்பு வெளிநாடுகளுக்கும் செல்லும் இந்திய மாணவர்கள் குறித்துப் பல கேள்விகள் எழுந்து வரும் வேளையில் ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் பல கோடி பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்திய மாணவர்கள்
மருத்துவப் பிரிவில் மட்டும் வெளிநாட்டில் படித்து வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை தற்போது வெளியுறவு விவகார துறை அமைச்சகம் வெளியாகியுள்ளது. இதன் படி சீனாவில் 23,000 பேர், உக்ரைனில் 18000 பேர், ரஷ்யாவில் 16500 பேர், பிலிப்பைன்ஸ் 15000 பேர், கிர்கிஸ்தானில் 10000 பேர், ஜார்ஜியாவில் 7500 பேர், பங்களாதேஷில் 5200 பேர், கஸகில்தானில் 5200 பேர், போலாந்தில் 4000 பேர், அரமினியாவில் 3000 பேர் படித்து வருகின்றனர்.
ஆனந்த் மஹிந்திரா
இந்தத் தகவல் அடங்கிய புகைப்படத்தை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மருத்துவக் கல்லூரிக்கு இவ்வளவு பற்றாக்குறை உள்ளது எனக்கு எப்போதும் தெரியாது என ட்வீட் செய்துள்ளார்.
சிபி குர்னானி
இதோடு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வான் சிபி குர்னானி-ஐ டேக் செய்து நம்முடைய மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்யக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
மருத்துவக் கல்லூரி
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பதோடு, மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்திய மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை குறையும். இது மட்டும் அல்லாமல் இதன் மூலம் இந்தியாவில் மருத்துவச் சேவையின் தரம் தொடர்ந்து அதிகரிக்கும்.
நவீன் சேகரப்பா மரணம்
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவ படையின் தாக்குதலில் மரணம் அடைந்த நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அவர் குண்டு வீச்சில் தாக்கப்பட்டார் என்று கார்கிவ் நகரில் உள்ள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
தகுதித் தேர்வு
நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றவர். ஆனாலும் இந்தியாவில் அவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications