கடந்த வாரத்தில் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறிய பெட்டர்.காம் நிறுவனத்தின் பணி நீக்கம், பல்வேறு தரப்பினரின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், ஊழியர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அமெரிக்காவினை தளமாகக் கொண்ட வீட்டு வசதி நிறுவனம் ஒன்று ஜும் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
உடனடியாக பணி நீக்கம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விஷால் கார்க் என்பவர் அமெரிக்காவினை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் பெட்டர்.காம்மின் தலைமை செயல் அதிகாரியாவார். இவர் கடந்த வாரத்தில் ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தார். அதுவும் ஒரே ஜூம் காலில் நீங்கள் இந்த ஜூம் காலில் இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் நீங்கள் இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.
வீடியோ வைரல்
இந்த குழுவில் நீங்கள் இருந்தால் துரதிஷ்டவசமானவர். கடந்த முறை இது போன்ற முடிவினை எடுத்தபோது நான் அழுதேன். ஆனால் தற்போது இல்லை. இதில் எனக்கு விருப்பமில்லை. எனினும் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். இது பணியாளர்களின் செயல்திறன், சந்தை மாற்றங்களால் எடுக்கப்பட்ட முடிவு. என்னை மன்னித்து விடுங்கள் என கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.
என்னை மன்னித்து விடுங்கள்
இதற்பிறகு சமூக வலைதளத்தில் இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் தான் பணி நீக்கம் குறித்து கையாண்ட விதத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் இது குறித்தான கடித்தத்தில் பணி நீக்கம் செய்ததில் தவறு செய்து விட்டேன். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பிற்காக தகுந்த மரியாதை அளிக்க தவறி விட்டேன். ஊழியர்களுக்கு பாரட்டுகளை தெரிவிக்க தவறிவிட்டேன். அவ்வாறு செய்ததன் காரணமாக நான் உங்களை கஷ்டப்படுத்தி விட்டேன். இதன் மூலம் நான் உங்களை மேலும் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக கடித்தத்தினை எழுதியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் கருத்து என்ன?
ட்விட்டரில் எப்போதும் பிசியாக இருந்து வரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பெட்டர்.காமின் தலைமை செயல் அதிகாரியின் பணி நீக்கம் குறித்தான "தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை" செய்தியினை சுட்டி காட்டி, இதன் பிறகும் இவர் CEO ஆக இருக்க முடியுமா? இவருக்கு இரண்டாவது வாய்ப்பினை அனுமதிப்பது நியாயமா? இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கெவின் ரியான் கருத்து
இதே அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கெவின் ரியான் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இந்த சமயத்தில் பணிநீக்கம் செய்வது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எனினும், வேகமாக வளர்ந்து வரும் வீட்டுவசதி சந்தையில் வளர்ச்சியடைய கவனம் முழுவதையும் அதில் செலுத்தும் பணியாளர்களே தேவை என கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து, பலரும் பல்வேறு வகையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications