இந்தியாவில் விமானச் சேவைகள் எப்போதும் இல்லாத வகையில் வேகமாகவும் பெரிய அளவிலும் விரிவாக்கம் அடைந்து வருகிறது, குறிப்பாகப் பெரு நகரங்கள் உடன் 2ஆம் தர நகரங்களை இணைக்கும் பணிகள் படு சீரியஸ் ஆக நடந்து வருகிறது.
உதாரணமாகத் தமிழ்நாட்டில் கேயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்துடன் சென்னை-க்கு தினசரி அடிப்படையிலும், வாரத்தில் குறைந்தது 2-3 நாள் விமானச் சேவைகள் துவங்கப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி பிற விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமானச் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதேபோன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விமானச் சேவை விரிவாக்கம் நடந்து வருகிறது, ஆனால் வேகமும், அளவும் வித்தியாசப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலையங்களும், விமான நிலைய சேவைகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இப்படி 2020 ஆம் ஆண்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் முதல் முறையாக இண்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் ட்ராலி அறிமுகம் செய்யப்பட்டது. இது விமானப் பயணிகளுக்கு அவர்களின் விமான நேரத்தில் தயாராக இருப்பது மட்டும் அல்லாமல் பல சேவைகளை அளிக்கிறது.
இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆன நிலையில் இந்தியாவின் டிவிட்டர் சூப்பர்ஸ்டாரான ஆனந்த் மஹிந்திரா கண்ணில் தென்பட்டுள்ளது. மஹிந்திரா குழுமம் ஆட்டோமொபைல் துறையைத் தாண்டி பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் எப்போதும் இந்தியாவுக்கும் பல நாடுகளுக்கும் பயணம் செய்தும், நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்றும் பிசியாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் அதிகப்படியான நேரம் செலவழிப்பது பலரையும் வியக்க வைக்கிறது. மனுஷன் எலான் மஸ்க் மாதிரி போல.
இந்த நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருக்கும் ஸ்மார்ட் ட்ராலியை பார்த்து வியந்து, இது செம கூலான விஷயம், இதுபோன்ற ட்ராலியை நான் இதுவரையில் வெளிநாட்டு விமான நிலையத்தில் கூடப் பார்த்தது இல்லை. ஹைதராபாத் விமான நிலையத்தில் இதுபோன்ற ட்ராலியை அறிமுகம் செய்யப்பட்டதா, இது தவறாகக் கூட இருக்கலாம் என டிவீட் செய்து வீடியோ-வை பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை நீங்களே பாருங்க.


Click it and Unblock the Notifications