செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக அலுவலக வேலைகள் அழிந்துவிடுமோ என்ற அச்சமே இன்று உலகச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இதைவிட மிகவும் உடனடியான மற்றும் தீவிரமான ஒரு பிரச்சனை தொழிலாளர் சந்தையை ஆட்டிப்படைப்பதாக எச்சரித்துள்ளார். அதாவது, நாட்டின் பொருளாதாரத்தை இயங்க வைக்கும் முக்கியமான துறைகளில், திறமையான பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது என்று அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திறமையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணம், நமது சமூகப் பண்பாட்டு கட்டமைப்பே என்று ஆனந்த் மஹிந்திரா சுட்டிக்காட்டுகிறார். பல பத்தாண்டுகளாக, சமூகம் பட்டப்படிப்புகளையும், மேசையில் அமர்ந்து செய்யும் வேலைகளையும் மட்டுமே உயர்வாக மதித்தது. ஆனால், கைகளால் நேரடியாக வேலை செய்யும் திறன் சார்ந்த தொழில்களுக்கு குறைவான மதிப்பே கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, ஒரு தலைமுறை இளைஞர்கள், அதிக மதிப்புள்ள கைத்தொழில் பயிற்சிகளை புறக்கணித்து, மேசை வேலைகளை நோக்கி சென்றனர்.

இதில் விசித்திரம் என்னவென்றால், AI ஆட்கொள்ள முடியாத வேலைகள் இந்த திறன் சார்ந்த தொழில்கள்தான். ஒரு மெக்கானிக்காக வாகனத்தை சரிசெய்வது, குழாய்கள் பதிப்பது, மின்சார வேலைகளை செய்வது போன்றவற்றுக்கு பிரத்தியேகமான தீர்ப்பு, கைத்திறன் மற்றும் அனுபவம் தேவை. இந்த வேலைகளை ஒரு கணினியால் செய்ய முடியாது.
ரூ.1 கோடி சம்பளம் தந்தும் ஆட்கள் இல்லை :
இந்த நெருக்கடியின் தீவிரத்தை ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி விளக்கியுள்ளார். அவரது நிறுவனத்தில் மட்டும் சுமார் 5,000 மெக்கானிக் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளனவாம். இதில் சில வேலைகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்க முன்வந்தாலும், அதை ஏற்க தகுதியான ஆட்கள் வருவதில்லை.
அமெரிக்கா முழுவதும் எலக்ட்ரீஷியன், டிரக் ஓட்டுநர், பிளம்பர் மற்றும் உற்பத்தி துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலைகள் இல்லை என்பது பிரச்சனை அல்ல; அந்த வேலைகளை செய்ய திறன் பெற்ற தொழிலாளர்கள் இல்லை என்பதுதான் இங்குள்ள சிக்கல். இது நாட்டின் உற்பத்தி திறனைப் பாதிக்கும் தேசிய அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
புதிய புரட்சி : இந்த திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை, ஒரு புதிய சமூக மாற்றத்தை உருவாக்கும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். சமூகத்தில் தொழிலாளர்களின் மதிப்பு இப்போது மிக உயர்வாகிறது. அவர்கள் மிகவும் திறமைசாலியாகவும், அத்தியாவசியமானவராகவும், பற்றாக்குறையாகவும் மாறுவதால், அவர்களுக்கு சந்தையில் அதிக தேவை உருவாகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
இது வன்முறை இல்லாமல், அந்தந்த வேலைகளின் உண்மையான மதிப்பை சமூகம் உணர்ந்து அங்கீகரிப்பதன் மூலம் வரும் ஒரு புரட்சியாகும். இனி வரும் காலத்தில், அதிகம் சம்பாதித்து வெற்றி பெறுபவர்கள், கணினி நிரலாளர்களை (Computer programmers) விடவும், இந்தத் திறன் சார்ந்த தொழில்களை செய்பவர்களாகவே இருக்கக் கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications