மஹிந்திரா கார் குப்பை.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த தக் லைப் பதில்..!!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் காணாமல் போய்விடும் என சமூகவலைதளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு, ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமாகவும் இதனை பல தொழிலதிபர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனர்களும் எடுத்து கொண்டு உள்ளனர்.

மஹிந்திரா கார் குப்பை.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த தக் லைப் பதில்..!!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானவர்கள் இவரை பாலோ செய்து வருகின்றனர். பெரும்பாலான பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்பதால் ஆனந்த் மஹிந்திரா மீது நெட்டிசன்களுக்கு தனி மதிப்பு உண்டு.

இந்த நிலையில் தான் எக்ஸ் தள பயனர் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அந்த நாட்டு கார் உற்பத்தியாளர்களோடு போட்டியிட முடியாமல் தோற்றுப் போய்விடும் எனக் கூறியிருந்தார்.

அந்நாட்டின் இறக்குமதி கொள்கை மாறும் வரையில் அனுபவித்துக்கொள்ளுங்கள். ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் விரைவில் காணாமல் போய்விடும் என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா உங்களது இந்த சந்தேகத்துக்கு நன்றி, இது எங்களை மேலும் உத்வேகத்துடன் செயல்படுவதற்கு மட்டுமே தூண்டுகிறது என கூறியுள்ளார்.

"1991 ஆம் ஆண்டு நான் நிறுவனத்தில் சேர்ந்த போது எனக்கும் இதே தான் கூறப்பட்டது, உலகளாவிய ஆலோசகர்கள் இந்த துறையை விட்டு வெளியேறி விடுங்கள் என எங்களுக்கு அறிவுரை வழங்கினர். டொயோட்டா மற்றும் பிற உலகளாவிய ஜாம்பவான்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது எங்கள் நிறுவனத்திடம் இதே தான் சொன்னார்கள்.

ஆனால் நாங்கள் இன்னமும் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் போராடி வருகிறோம். அதை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்கிறோம். அடுத்த நூறு வருடங்களுக்கு நாங்கள் இருப்போம்.ஒவ்வொரு நாளும் உங்களது அங்கீகாரத்தை பெறுவதற்காக நாங்கள் போராடுவோம்" என பதில் அளித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா தங்களுடைய நிறுவனத்தின் புதிய காரை சிறிய ரக எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதில் தந்திருந்த அர்னவ் ஸ்ரீவாஸ்தவா என்ற நபர் உங்களது கார்களால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கார்களோடு போட்டியிட முடியாது எனக் கூறியிருந்தார்.

இந்தியாவில் இறக்குமதி வரி விகிதங்கள் குறையும் போது வெளிநாட்டு கார்களின் வருகை அதிகரிக்கும், அவற்றுடன் போட்டியிட முடியாமல் மஹிந்திரா கார் நிறுவனம் காணாமல் போகும் என தெரிவித்திருந்தார். அவரது காட்டமான இந்த பதிவுக்கு ஆனந்த் மஹிந்திரா பக்குவமான முறையில் பதில் தந்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+