நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கும் மிக முக்கியமான பந்தம் உள்ளது. இந்த நிலையில் மஹிந்திராவின் புதிய எஸ்யூவி ஸ்கார்பியோ என் மாடல் காரை ரஜினி தனது வேட்டையன் படத்தில் பயன்படுத்தியதை பெறுமைப்படுத்தும் விதமாக ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
பிக் டாடி என அழைக்கப்படும் இந்த மாடல் கார் ஆனது கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தின் சண்டை காட்சியை தொகுத்து வீடியோவாக உருவாக்கியுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் கணக்கில் முதன்முறையாக இரண்டு பிக் டாடிஸ் ஆன் ஒன் ஸ்கிரீன் என்ற கேப்ஷன் உடன் ப்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு கார் லெஜண்டரியாக மாற வேண்டும் எனில், அதை ஒரு லெஜண்ட் நம்ப வேண்டும் என்றும், 2024 அக்டோபர் 10ல் திரையரங்குகளுக்கு வந்த வேட்டையன் வெற்றி பெற்ற வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
அந்த திரைப்பட ட்ரெயிலரில் போலீஸ் அதிகாரியாக மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ என் காரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் ரவுடிகளை அடிக்கும் சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தற்போது மஹிந்திரா கார் நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு ஸ்கார்பியோ என் வெற்றியையையும், வேட்டையன் பட வெற்றியையும் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் காலா படத்தில் மஹிந்திரா தார் காரை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் ஆம் தேதி லைகா ப்ராடெக்ஷன் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை டி.ஜே ஞானவேல் தயாரித்துள்ளார். இதற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சான், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திக்கா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேபோல், மஹிந்திரா நிறுவனத்தின் ஜூப் மாடல் வரிசையில் தாரின் புதுப்பிக்கப்பட்ட தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் புக்கிங்களை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications