ஆனந்த் மஹிந்திரா-வின் மகள்களா இவங்க.. என்ன பண்றாங்க தெரியுமா..?!!

இந்திய தொழிலதிபரும், டிவிட்டர் சூப்பர்ஸ்டாரான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் கோபால் மஹிந்திரா, மே 1, 1955 இல் பிறந்தார். இவருடைய வர்த்தகம், பதவி குறித்து அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இவருடைய பர்சனல் லைப் என்பது வெளியுலக வெளிச்சம் படாமல் உள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா இணை நிறுவனர் ஜகதீஷ் சந்திர மஹிந்திராவின் பேரன் தான் ஆனந்த் மஹிந்திரா. ஃபோர்ப்ஸ் 2023 அறிக்கையின்படி, ஆனந்த் மஹிந்திரா நிகர சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலராகும்.

ஆனந்த் மஹிந்திரா-வின் மகள்களா இவங்க.. என்ன பண்றாங்க தெரியுமா..?!!

ஆனந்த் மஹிந்திரா பத்திரிகையாளரான அனுராதா என்பவரை காதலித்து மணந்தார். பத்திரிகையாளரான அனுராதா, ஆனந்த் மஹிந்திராவை மணந்த பின்பு வெர்வ் என்ற பத்திரிகையை நிறுவினார். தற்போது அனுராதா வெர்வ் மற்றும் மேன்ஸ் வேர்ல்ட் பத்திரிகைகளின் ஆசிரியராக உள்ளார்.

இவர்களுக்கு திவ்யா மற்றும் அலிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மகளின் வாழ்க்கையை மிகவும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறார்கள் ஆனந்த் மஹிந்திரா.

ஆனந்த் மஹிந்திரா-வின் மகள்களா இவங்க.. என்ன பண்றாங்க தெரியுமா..?!!

திவ்யா நியூ ஸ்கூலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், இவர் டிசைன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். 2009 இல் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு ஃப்ரீலான்ஸராகவும், பல்வேறு நிறுவனங்களில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றினார். பிப்ரவரி 2016 இல், அவர் கலை இயக்குநராக வெர்வ் இதழில் சேர்ந்தார் மற்றும் இப்போதும் இந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

திவ்யா மஹிந்திரா நியூயார்க்கை தளமாகக் கொண்ட மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான ஜார்ஜ் ஜபாடாவை மணந்தார்.

ஆனந்த் மஹிந்திரா-வின் மகள்களா இவங்க.. என்ன பண்றாங்க தெரியுமா..?!!

ஆனந்த் மஹிந்திரா-வின் இரண்டாவது மகளான ஆலிகா ஒரு பிரெஞ்சு நாட்டவரை மணந்தார். முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரங்களில் தங்கள் மகளின் திருமணம் குறித்து ஆனந்த் மஹிந்திரா குடும்பம் பலரின் கவனத்தை அப்போதே பெற்றது.

ஆனந்த் மஹிந்திரா தற்போது மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள அவரது ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மட்டும் அல்லாமல் மிகப்பெரிய ஓவிய சேகரிப்பாளரும் கூட. இவர் வீட்டில் பல காஸ்ட்லியான பெயின்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் மஹிந்திரா-வின் மகள்களா இவங்க.. என்ன பண்றாங்க தெரியுமா..?!!

ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான மஹிந்திரா குழுமம் விமானம், வேளாண் வணிகம், பழைய கார்களின் விற்பனை, வாகனங்கள் தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எனர்ஜி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல், தளவாடங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை விற்பனை என பல துறையில் இயங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+