டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சிபி குர்னானி 19 ஆண்டுகளுக்கு பின்பு தனது பதவியில் இருந்து விலக உள்ளார். இவருடைய வெளியேற்றம் பல டெக் மஹிந்திரா உயர் அதிகாரிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் டெக் மஹிந்திரா உடன் இணைக்கப்பட்ட காலத்தில் இருந்து சிபி குர்னானி சிஇஓ-வாக இருக்கும் காரணத்தால் பல பலர் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதால் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் எப்போதும் இவருக்கு அன்பு உள்ளது.

டெக் மஹிந்திரா-வுக்கும் இவருக்குமான இணைப்பை காட்டும் வகையில் உலகளவில் இருக்கும் டெக் மஹிந்திரா அலுவலகத்தில் இருக்கும் மண்ணை கொண்டு sand clock செய்யப்பட்டு இவருக்கு டிசம்பர் 19ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று கொடுக்கப்பட்டது. இதில் மிகவும் எமோஷனலானார் சிபி குர்னானி.
சிபி குர்னானி கடந்த மாதமே அனைத்து நிர்வாக குழுவில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்தார். டெக் மஹிந்திராவின் புதிய சிஇஓ-வாக பெறுபேற்கும் மோஹித் ஜோஷி-க்கு கடந்த 6 மாதத்தில் அனைத்து பணிகளையும், பொறுப்புகளையும் சரியான முறையில் கைமாற்றி டெக் மஹிந்திராவை விட்டு வெளியேற தயார் ஆனார்.
இந்த நிலையில் டிவிட்டர் சூப்பர்ஸ்டாரான ஆனந்த் மஹிந்திரா சர்ப்ரைஸ் கொடுத்தார். உங்களை சும்மா விடமுடியாது என்பது போல சிபி குர்னானி-க்கு புதிய பதவி கொடுத்துள்ளார். இதன் மூலம் சிபி குர்னானி தொடர்ந்து மஹிந்திரா குழுமத்தில் பணியாற்ற உள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா-வின் டிவிட்டர் பதிவில் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்போதும் Farewell கொடுக்க முடியாது. சிபி குர்னானி இப்போது மஹிந்திரா ஹாலிடேஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக பணியாற்ற உள்ளார், எங்களை விட்டு அவர் எங்கும் செல்ல முடியாது என தெரிவித்தார்.
குர்னானி-யின் சாதனைகளும், டெக் மஹிந்திரா தொட்ட உயரத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்க இது சரியான நேரம். டெக் மஹிந்திரா பயணம் எளிதானது அல்ல, உங்களுடன் ஒரு சக பயணியாக இருந்ததில் மகிழ்ச்சி என ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications