டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் மடும் இதுவரை 1,761 பேர் கொரோனா தொற்றுக்கு ஆகியுள்ளனர். இதே பலி எண்ணிக்கையானது 127 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதே இந்தியா முழுவதும் 8,356 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும் நிலையில், 273 பேர் பலியாகியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு
இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 14-ந்தேதி முடிவடையும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார்.
ஊரடங்கு அதிகரிப்பு
இதற்கிடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீடியோ மூலம் மாநில மக்களிடம் பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா இந்த மாதம் 30-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும். எனினும் இந்த காலக்கட்டத்தில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
ஊரடங்கு தளர்வு
சில இடங்கள் தவிர மற்ற இடங்கள் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா எண்னிக்கை கட்டுப்படுதலை பொறுத்து இந்த முடக்கநிலை தளர்த்தப்படும். இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாக்கரே கூறியுள்ளார். அதாவது விவசாய பொருட்களுக்கு எந்த வித தடையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனந்த் மகேந்திரா பாராட்டு
இது குறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தவ் தாக்கரேவின் நடவடிக்கையை பாரட்டியதோடு, நீங்கள் முன்னணியில் இருந்து செல்கிறீர்கள். அதோடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதுமான உதவிகள் செய்யப்பட வேண்டும். மேலும் விவசாய பண்ணை பொருட்களுக்கு ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும், நகர்புறங்களில் உழவர் சந்தைகளை பொருத்தமான தொலைதூர நெறிமுறைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications