தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா செப்டம்பரில் ஒரு அமெரிக்க விலாகர் பகிர்ந்த வீடியோவுக்கு பாராட்டுப் பதிவை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். ராயன் என்னும் உணவு விற்பனையாளர் படித்துக் கொண்டே பார்ட் டைமாக ஒரு தள்ளுவண்டி கடையை நடத்தி வருகிறார். அவருடைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி அவருக்கு பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது. இதை அடுத்து தற்போது ஆனந்த் மகேந்திராவும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னையில் சுற்றுப்பயணம் வந்தபோது தாருல் ராயனின் உணவு வண்டிக் கடையை கண்டுபிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமாக பேசப்படும் கிறிஸ்டோபர் லூயிஸ் ராயனின் கடையில் உணவு ஆர்டர் செய்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய வீடியோவை பகிர்ந்தார். கூகுள் மேப்பில் ராயனின் கடையை கண்டுபிடித்து அவருடைய கடைக்கு சென்ற லூயிஸ் அவரிடம் ஒரு சிக்கன் 65 மற்றும் கட்லெட்டை ஆர்டர் செய்துள்ளார்.

பிஹெச்டி படித்துக்கொண்டே பார்ட் டைமாக பிசினஸ் செய்வதாக ராயன் லூயிஸிடம் கூறினார். பயோடெக்னாலஜியில் முனைவர் பட்டம் பெற்ற ராயன் தனது கல்வி இலக்குகளை தொடர்வதற்காக சென்னையில் உணவு வண்டி கடையை நடத்தி வருகிறார். வைரலான அந்த வீடியோவில் ராயன் தான் வழங்கும் உணவை பற்றி கூறியது மட்டுமல்லாமல் லூலூயிஸிடம் தனது கல்வி ஆராய்ச்சியை ஆன்லைனில் பார்க்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
வீடியோவில் ராயன் தன்னுடைய பெயரை கூகுள் செய்யுமாறு லூயிஸிடம் கூறுகிறார். இந்த நேரத்தில் பலரும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தை காட்டுவதற்காக தான் ராயன் கூகுள் செய்ய சொல்லி இருக்கிறார் என்று தோன்றியிருக்கும். ஆனால் அது இல்லை தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆன்லைனில் பார்க்கலாம் என்று கூறினார் ராயன். கல்வி மீதான அர்ப்பணிப்பு அவருக்கு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இது குறித்து ஆனந்த் மகேந்திரா ஒரு பதிவையும் எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ளார்.
வெளியான வீடியோ குறித்து ஆனந்த் மகேந்திரா "ராயன் ஃபோனை எடுத்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்கள் குறித்து அவருக்கு காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முடிவில் அவர் எழுதிய ஆய்வு கட்டுரைகளை ஆன்லைனில் பெருமையுடன் காட்டுகிறார். நம்ப முடியவில்லை.. தனித்துவமானது இந்தியா!" என்று பதிவிட்டுள்ளார்.
ராயன் போன்ற நபர்கள் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரண்டுக்கும் சமமான பங்களிப்பு செய்வது பாராட்டுக்குரியதாக உள்ளது. வேலை செய்து கொண்டே படிக்கும் பலருக்கும் இவருடைய கதை உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications