மும்பை பெண்ணின் வர்த்தகத்தை புகழ்ந்து தள்ளும் ஆனந்த் மஹிந்திரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா குழுமத்தின் தலைவராகவும், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டெக் மஹிந்திராவின் non-executive chairman ஆகவும் உள்ளார்.

 

இவரது பதவிக் காலத்தில், மஹிந்திரா குழுமம் ஆட்டோமொபைல் முதல் விவசாயம் வரை, தகவல் தொழில்நுட்பம் முதல் ஏரோஸ்பேஸ் வரை எனப் பல்வேறு துறையில் உள்நாட்டிலும் உலக அளவிலும் விரிவடைந்துள்ளது.

இந்தப் பிசியான நேரத்திலும் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் அவ்வப்போது தன் மனத்திற்கு நெகிழ்வான மற்றும் மன நிறைவைத் தரும் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் ஒரு 'உணவு' வணிகத்தைப் பற்றிப் பாராட்டி டீவிட் செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வணிகத்தை உண்மையில் விண்ணை முட்டும் விலைக்குத் தகுதியானது என்றும் புகழ்ந்து தனி அங்கிகாரம் கொடுத்துள்ளார்.

கீதா பாட்டீல்

கீதா பாட்டீல்

ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டில், மும்பையைச் சேர்ந்த கீதா பாட்டீல் என்பவர் சமையலில் இருக்கும் தனது ஆர்வத்தைச் சிறப்பான வணிகமாக மாற்றியுள்ள செய்தியை பகிர்ந்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பாட்டீல் காக்கி
 

பாட்டீல் காக்கி

பாட்டீல் காக்கி என்ற ஸ்னாக்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை உணவகத்தின் உரிமையாளர் தான் கீதா பாட்டீல். இவரது கடையில் முறுக்கு, உகடிச்சே மோடக் மற்றும் பூரன்பொலி போன்ற மகாராஷ்டிர இனிப்புகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார் கீதா பாட்டீல்.

ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்

ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்

கடையின் உரிமையாளரான கீதா பாட்டீல் தனது தாயாரால் ஈர்க்கப்பட்டுச் சமைக்கத் தொடங்கினார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கீதா பாட்டீல் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஸ்னாக்ஸ் சமைத்துக் கொண்டிருந்த போது, அவர் 2016 இல் தனது தொழிலைத் தொடங்கினார்.

'உணவு' ஸ்டார்ட்அப்

'உணவு' ஸ்டார்ட்அப்

ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் , "இது உண்மையிலேயே உயரும் மதிப்பீட்டிற்குத் தகுதியான 'உணவு' ஸ்டார்ட்அப் ஆகும்.பொருட்களின் தரம் உறுதியானவை. இதைப் பிஸ்னஸ் ஸ்கூலில் கூடல கற்றுக்கொள்ள முடியாது எனப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவில் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். மஹிந்திராவுடன், பங்கஜ் ஆர் படேல் மற்றும் வேணு சீனிவாசன் மற்றும் முன்னாள் ஐஐஎம் (அகமதாபாத்) பேராசிரியர் ரவீந்திர எச் தோலாகியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நான்கு ஆண்டு

நான்கு ஆண்டு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) நான்கு ஆண்டுக் காலத்திற்கு இப்பதவியில் இருக்கப் பரிந்துரை செய்தது அறிக்கை வெயிட்டுள்ளது. மத்திய இயக்குநர்கள் குழு ரிசர்வ் வங்கியின் வணிகத்தை நிர்வகிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra praises Mumbai woman-led food business in twitter post

Anand Mahindra praises Mumbai woman-led food business in twitter post மும்பை பெண்ணின் வர்த்தகத்தைக் கொண்டாடும் ஆனந்த் மஹிந்திரா..!
Story first published: Saturday, June 25, 2022, 21:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X