1947ல் வின்ஸ்டன் சர்ச்சில் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்த்ரா!

இங்கிலாந்து பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இங்கிலாந்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆனது குறித்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களை பற்றி இங்கிலாந்தின் வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா அவர்களின் இந்த ட்விட் பதிலடியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லிஸ் ட்ரஸ் பதவி விலகல்

லிஸ் ட்ரஸ் பதவி விலகல்

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் இங்கிலாந்து நிதியமைச்சருமான ரிஷி சுனக் தான் அடுத்த பிரதமர் என்பது உறுதி செய்யப்பட்டது.

போட்டியாளர் விலகல்

போட்டியாளர் விலகல்

ரிஷி சுனக் அவர்களுக்கு இருந்த ஒரே போட்டியாளரான பென்னி மோர்டான்ட் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் உயர்பதவியான பிரதமர் பதவியை பெற்றிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவை ஆண்ட இந்தியா

இந்தியாவை ஆண்ட இந்தியா

இந்தியாவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிசெய்த இங்கிலாந்து நாட்டை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்யப் போகிறார் என்ற பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது ட்விட்டரில் கூறியபோது ;1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கிலாந்து நாட்டின் வின்ஸ்டர் சர்ச்சில் கூறியபோது, 'அனைத்து இந்திய தலைவர்களும் அறிவு திறன் குறைந்தவர்களாக உள்ளனர் என்றும் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள் என்றும் கூறினார். ஆனால் இன்று இங்கிலாந்து நாட்டையே ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் ஆட்சி செய்ய உள்ளார் என்பதால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். வாழ்க்கை அழகானது' என்று பதிவு செய்துள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+