இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை உடையது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான கார்களை மக்கள் விரும்புவார்கள். ஆனால் நீண்ட காலமாகவே பெரிய கார்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்த ஈர்ப்பு தற்போது இந்திய சந்தையை SUV காலமாக மாற்றியுள்ளது என்று கூறினால் மிகையில்லை.
இந்தியாவில் SUV பிரிவில் பல கார்கள் மக்கள் மனதில் அன்று முதல் இன்று வரையில் நீங்கா இடம்பிடித்திருந்தது, ஆரம்பக்கட்டத்தில் டாடா சுமோ, டாடா சபாரி, டோயோட்டா குவாலிஸ், பார்சூனர், இன்னோவோ இதற்கு மத்தியில் 2002 ஆண்டில் மஹிந்திரா நுழைத்த ஒரு கார் தான் ஸ்கார்பியோ.

2002 முதல் சமீபத்தில் அறிமுகமான ஸ்கார்பியோ என் வரையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற SUV கார்களில் ஒன்றாக உள்ளது. ஸ்கார்பியோ-வின் தோற்றம் பலருக்கு கெத்து பீலிங்கை கொடுத்த காரணத்தால் இதன் விற்பனை இன்றும் சக்கை போடு போடுகிறது. ஆனால் காரின் வெற்றி தான் ஆனந்த் மஹிந்திராவின் வேலையை காப்பாற்றியது.
ஜூலை 1 ஆம் தேதி பிரபல ஆட்டோகார் பத்திரிக்கையின் தலைவராக இருக்கும் Hormazd Sorabjee, தனது டிவிட்டரில் 2002 ஆம் ஆண்டு முதல் 900000 லட்சம் ஸ்கார்பியோ கார்-ஐ தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது என்ற தகவலை வெளியிட்டார். இதுமட்டும் அல்லாமல் மஹிந்திரா நிறுவனத்தின் தோற்றத்தை இந்த ஒரு கார் மாற்றியது எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மஹிந்திரா குரூப் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, Hormazd Sorabjee-ஐ டேக் செய்து நாசிக்-ல் நாம் இருவரும் ஸ்கார்பியோ காரின் ப்ரோட்டோ டைப்-ஐ ரோடு டெஸ்ட் செய்தது நினைவிருக்கா..? உண்மையிலேயே Mahindra Scorpio ஒரு போர்குதிரை தான்.
Mahindra Scorpio கார் எப்போதும் எங்களின் வெற்றியில் முக்கிய பங்கீட்டை கொண்டு உள்ளது, இந்த கார் மட்டும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமலும், விற்பனை ஆகாமலும் தோல்வி அடைந்திருந்தால் மஹிந்திரா நிர்வாக குழு என்னை பணிநீக்கம் செய்திருக்கும். என்னுடைய கரியர்-க்கு Mahindra Scorpio முக்கிய பங்கு வகிக்கிறது என ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
சரி உங்களுக்கு பிடித்த Mahindra Scorpio வெர்ஷன் எது..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க...


Click it and Unblock the Notifications