10 நிமிட டெலிவரி மனிதாபிமானமற்ற செயல்.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த ட்வீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரின் டிவிட்டருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக சிந்தனையுள்ள மஹிந்திரா, அவ்வப்போது தான் ரசித்த விஷயங்களையும், தொழில் சார்ந்த பதிவுகள் சுவாரஷ்யம் மிக்க பதிவுகள் என அவ்வப்போது பதிவிடுவார்.

சில நேரங்களில் மஹிந்திராவின் பதிவுகள் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் தலைவர் CS பிரமேஷ்-ன் ட்வீட்டினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா அதிரடி ட்வீட்.. நாம மெடிக்கல் காலேஜ் திறந்தால் என்ன..?! #Ukraineஆனந்த் மஹிந்திரா அதிரடி ட்வீட்.. நாம மெடிக்கல் காலேஜ் திறந்தால் என்ன..?! #Ukraine

 என்ன ட்வீட் அது?

என்ன ட்வீட் அது?

பகிர்ந்துள்ளதோடு, அதனை நானும் ஒப்புக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அப்படி அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் எனக்கு எத்தனை ட்ரோல்கள் வந்தாலும் கவலையில்லை. ஆனால் 10 நிமிடங்களில் மளிகை சாமான்கள் டெலிவரி என்பது மனிதாபிமானமற்றது. அதனை நிறுத்துங்கள். வாடிக்கையாளர்கள் 2 அல்லது 6 மணி நேர டெலிவரி நேரத்துடன் வாழலாம் என பதிவிட்டுள்ளார். இதனை ஸ்விக்கி, சோமேட்டோவுக்கும் டேக் செய்துள்ளார்.

 

 விளம்பரங்கள் சித்தரிக்கின்றன

விளம்பரங்கள் சித்தரிக்கின்றன

ஆனந்த் மஹிந்திடா பகிர்ந்துள்ள இந்த பதிவினை சிலமணி நேரங்களிலேயே பலரும் ரீட்வீட் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.

ஒரு ட்விட்டர் பயனர் ஒருவர் பிரமேஷ்-னையும் ஸ்விக்கி சோமேட்டோவினையும் டேக் செய்து, இது மிகவும் உண்மை சார். விளம்பரங்கள் மக்கள் அத்தகைய டெலிவரிகளை சார்ந்திருப்பதாக சித்தரிக்கின்றன. இது நம் முன்னோர்களின் சேமித்தல், பாதுகாத்தல், நிர்வகித்தல் போன்ற கலாச்சாரத்தினை கேலி செய்யும் விதமாக உள்ளது. ஆண்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் குடும்பங்களை நான் இன்னும் அறிவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 மோசமான செயலை நிறுத்துங்கள்

மோசமான செயலை நிறுத்துங்கள்

இதே மற்றொரு பயனர் இது சிந்தனையற்ற வளர்ச்சி, தயவு இந்த மோசமான செயலை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

மேலும் சில்லறை விற்பனை குறித்து சில பயனுள்ள தகவல்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதில் ஒன்று எரிபொருள் செலவு குறைத்தல்

விபத்துகள் குறையும்

வீணாகும் பொருட்கள் குறைப்பட்டுள்ளது.

 

 10 மடங்கு தரவும் தயாராக இருக்கிறார்கள்

10 மடங்கு தரவும் தயாராக இருக்கிறார்கள்

ஒரு சிலர் சோமோட்டோவின் 10 நிமிட டெலிவரிக்கு ட்விட்டரில் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் பயனர் ஒருவர் வாடிக்கையாளர்கள் இதில் விருப்பமாகத் தான் உள்ளனர். இதற்கு 10 மடங்கு பணம் செலுத்தவும் தயாராக உள்ளனர். ஆக இதில் ஏதும் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

 10 நிமிடத்தில் தேவையே இல்லை

10 நிமிடத்தில் தேவையே இல்லை

மற்றோரு ட்விட்டர் பயனர் ஒருவர் 10 நிமிடத்தில் மாளிகை டெலிவரி தேவையில்லை. அதனை முன் கூட்டியே திட்டமிட்டு முன்பேயும் வாங்கலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் வேண்டுமானால் 4 - 6 மணி நேரங்களில் சப்ளை செய்ய வேண்டியிருக்கும் என பதிவிட்டிள்ளார்.

இப்படி நூற்றுக் கணக்கானோர் தங்களது கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன? 10 நிமிட டெலிவரி என்பது சரியான திட்டமா? அதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? கமாண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

anand mahindra shared tweet on zomato 10 min delivery

anand mahindra shared tweet on zomato 10 min delivery/10 நிமிட டெலிவரி மனிதாபிமானமற்ற செயல்.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த ட்வீட்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X