உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில் இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் வென்றால் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
கிரிக்கெட் என்பது இந்தியர்களுக்கு வெறும் விளையாட்டு என்பது மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிகரமான உணர்வு என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதை ஒரு போர் போலவே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பார்ப்பார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு மரத்துக்கும் சுவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க நாய் ஒன்று மிகவும் ஆவலாக தன்னைத்தானே முயற்சித்து வரும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் யார் இருப்பார்கள் என்று அந்த நாய் மிகவும் ஆர்வத்துடன் பார்க்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மேலும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் நிச்சயம் மிகப்பெரிய வணிகம் நடக்கும் என்று அவரது வீடியோவுக்கு ட்விட்டர் பயனர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
வணிகம்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் அடுத்தகட்ட போட்டிகளுக்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் மைதானத்தில் ரசிகர்கள் கூடுவார்கள் என்றும் அதனால் மிகப்பெரிய வணிகம் நடக்கும் என்றும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
5 லட்சம் பார்வையாளர்கள்
மொத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ மிகப்பெரிய வரவேற்பை ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் பெற்றுள்ளது என்றும் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கணிப்புகள்
மேலும் கிரிக்கெட் ஆர்வலர்கள் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி குறித்த தங்கள் கணிப்பையும், இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்ப்பது போல் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அது இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications