இப்படி கூட சாப்பிடுவாங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சுவராசியமான வீடியோக்களை பதிவு செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

அந்த வகையில் நான்கு பேர் சாப்பிட்டுக்கொண்டே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா பதிவு செய்த இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

ஆகாஷ் அம்பானி முதல் பந்து.. அடுத்தது யார்..?! ஆனந்த் அம்பானி நிலை என்ன..?

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் பக்கத்தில் பிரபலமாக இருப்பவர் என்பதும் அவருடைய ட்விட்டர் பக்கத்துக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வித்தியாசமான வீடியோ

வித்தியாசமான வீடியோ

வித்தியாசமான வீடியோக்கள், சமூகத்தில் வித்தியாசமான செயல்படுபவர்கள், ஆச்சரியத்தக்க சாதனை செய்பவர்கள் ஆகியோர்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 நகரும் டைனிங் டேபிள்
 

நகரும் டைனிங் டேபிள்

அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நான்கு இளைஞர்கள் நகரும் டைனிங் டேபிள் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டே பயணம் செய்கின்றனர். ஒரு இடத்தில் அந்த இளைஞர்கள் பெட்ரோல் ஸ்டேஷனில் பெட்ரோல் போட்டுவிட்டு அதன் பிறகு மீண்டும் பயணம் செய்துகொண்டே சாப்பிடுகின்றனர்.

ஆனந்த் மஹிந்திரா வீடியோ

ஆனந்த் மஹிந்திரா வீடியோ

இந்த வீடியோவை பதிவு செய்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, 'இது இ-மொபிலிட்டி என்று நினைக்கிறேன். 'e' என்பது சாப்பிடுவதைக் குறிக்கிறது...' ("I guess this is e-mobility. Where 'e' stands for eat...") என்று நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு டைனிங் டேபிளா?

இப்படி ஒரு டைனிங் டேபிளா?

டைனிங் டேபிள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள், ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள், ஏன் நீச்சல் குளத்தில் நின்று கொண்டே சாப்பிடும் டைனிங் டேபிள் கூட இருக்கிறது.

மொபைல் டைனிங் டேபிள்

மொபைல் டைனிங் டேபிள்

ஆனால் முதல் முறையாக சாலையில் நகர்ந்து கொண்டே செல்லும் மொபைல் டைனிங் டேபிளை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் அதிசயங்கள் நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

ஒரு ட்விட்டர் பயனாளி இந்த வீடியோவின் கமெண்ட்டில் எனது மகன் இந்த வீடியோவை பார்த்த உடன் தனது நகரும் காரில் சோபாவில் வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார் என்று பதிவு செய்துள்ளார். இன்னொரு டுவிட்டர் பயனாளி ஏற்கனவே இது போன்று அமெரிக்காவில் சில இளைஞர்கள் காலில் பெடல் சைக்கிள் மிதித்துக் கொண்டே நகரும் டைனிங் டேபிளில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மொத்தத்தில் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் பதிவு செய்த இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra Shares Video about E Mobility for eat Mobility

Anand Mahindra Shares Video about E Mobility for eat Mobility | இப்படி கூட சாப்பிடுவாங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
Story first published: Tuesday, July 5, 2022, 6:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X