மஹிந்திரா குரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா ரோட்டோரம் சப்பாத்தி ரோல் தயாரித்து விற்கும் ஒரு சிறுவன் பற்றிய விடியோவை சமூகதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில் ஜஸ்பிரீத் என்ற 10 வயது சிறுவன் முட்டை ரோல் தயாரிப்பது இடம் பெற்றுள்ளது. தனது தந்தை அண்மையில் மூளையில் ஏற்பட்ட காசநோய் காரணமாக இறன்து விட்டதாக ஜஸ்பிரீத் கூறினான்.

அவனுக்கு 14 வயதில் சகோதரி இருக்கிறாள். இருவரையும் விட்டுவிட்டு அவர்களது தாயார் சென்றுவிட்டார் என்றும் எனவே குடும்பத்தைப் பார்க்கும் பொறுப்பு தனக்கு வந்துவிட்டதாகவும் ஜஸ்பிரீத் கூறினான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஜஸ்பிரீத் தனது பள்ளிக் கல்வியை காலையில் தொடர்கிறான். மாலையில் தள்ளுவண்டியில் சப்பாத்தி ரோல்களை செய்து விற்பனை செய்கிறான்.
முட்டை ரோல்கள் தவிர சிக்கன் ரோல்கள், கபாப் ரோல்கள், பன்னீர் ரோல்கள், சௌமீன் ரோல்கள், ஷீக் கபாப் ரோல்களையும் அவன் தயாரித்து விற்கிறான்.
இந்த விடியோ பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, தைரியம் இதுதான் ஜஸ்பிரீத்தின் பெயர். அவனது கல்வி இதனால் பாதிக்கப்படக் கூடாது. தில்லியில் உள்ள திலக் நகரில் அவன் வசிக்கிறான். யாராவது அவனது கான்டாக்ட் நம்பரை வைத்திருந்தால் தயவுசெய்து அதை ஷேர் செய்யுங்கள். மஹிந்திரா பவுண்டேஷன் டீம் அவனது கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜஸ்பிரீத்தின் தைரியத்தையும் ஆனந்த் மஹிந்திராவின் பெருந்தன்மையையும் பாராட்டியுள்ளனர்.
ஒரு பயனர், அவன் சளைக்க மாட்டான். பொறுப்புகளை கையில் எடுத்து துணிச்சலுடன் எழுந்து நிற்பான். சிரமமான நேரத்திலும் அயராமல் உழைப்பது பிறருக்கு உத்வேகத்தைத் தருகிறது. அவனுக்கு ஒரு சல்யூட். சரியான வழிகாட்டுதல் இருந்தால் அவன் கல்வியில் பல மைல்கல்களைப் படைப்பான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், ஜஸ்பிரீத்துக்கு பயமில்லை. கல்வி மிக முக்கியம். மஹிந்திரா பவுண்டேஷன் அவனது கல்விக்கு ஆதரவு தர முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
வேறு ஒருவர், இதைப் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஆனந்த் மஹிந்திரா இந்த தைரியமான சிறுவனுக்கு உதவுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சிறுவனுக்கு உதவுவதற்காக ஒரு கிரவுடு ஃபண்டைத் தொடங்கலாம். இதற்குப் பிறகு ஒருவேளை அவனது தாய் வந்து பணம் கேட்டால் அவன் அதை உதாசீனப்படுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா இதுபோன்று சிறுவர்களுக்கு உதவுவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னர் ஒரு சிறுமி தனது சகோதரியை தாக்கிய குரங்குகளிடம் இருந்து துணிச்சலோடு மீட்டு வீட்டுக்கு திரும்பினாள். அந்தச் சிறுமி பின்னர் வளர்ந்து பெரியவள் ஆன பின்னர் மஹிந்திரா நிறுவனம் அவளுக்கு வேலைவாய்ப்பைத் தந்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications