மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி உருவாக்கும் ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை பாராட்டி தள்ளியுள்ளார்.
இது மட்டும் அல்லாமல் கடந்த சில வருடத்தில் ஐஐடி மெட்ராஸ் செயல்பாடுகள் மூலம் இக்கல்லூரியின் இங்குபேட்டர் உலகின் மிகவும் "சிறப்பான தொழில்முனைவோர் வளர்ப்பு மையங்களில் ஒன்றாக" மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 10 மடங்கு வேகமான பயண அனுபவத்தை வழங்கும் பறக்கும் டாக்சிகளை உருவாக்கும் இலக்குடன் "தி இ பிளேன் கம்பெனி" (The ePlane Company) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை பற்றி தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா மட்டும் அல்லாமல் இந்தியாவே பேசி வருகிறது.
தி இ பிளேன் கம்பெனி ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களால் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
தனது சமூக வலைதள பக்கத்தில், "ஐஐடி மெட்ராஸ்-ல் துவங்கப்பட்டு உள்ள ஒரு ல்டார்ட்அப் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் பறக்கும் எலக்ட்ரி டாக்சியை உருவாக்க உள்ளது" என்று ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் Startup incubators அதாவது தொழில்முனைவோர் வளர்ப்பு மையங்கள் காரணமாக, இனி இந்தியாவில் உண்மையான புதுமை படைப்பாளிகள் இல்லாத நாடு என யாராலும் கூற முடியாது என்று கூறி, பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி உருவாக்கும் ஸ்டார்ட்அப்-ஐ ஆதரிக்கும் ஐஐடி மெட்ராஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவை இதுவரை 1,90,000 க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலர் தங்களுடைய கமெண்ட்களையும் பதிவிட்டு உள்ளனர்.
தி இ பிளேன் நிறுவனத்தை 2019ல் நிறுவி, தற்போது வரை நிர்வகித்து வருபவர் பேராசிரியர் சத்யநாராயண சக்கரவர்த்தி அவர்கள். இவர் 1998ஆம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்லூரில் விண்வெளிப் பொறியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கம்பெஷன் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Combustion Research and Development - NCCRD) நிறுவி தற்போது அதன் தலைவராகவும் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், கம்மெஷன் ஆராய்ச்சிக்கான மிகவும் மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையங்களில் இதுவும் ஒன்று.
இத்தகைய பறக்கும் வாகனங்களை நாட்டின் எல்லா இடங்களிலும் பயன்படுத்த வைப்பதே இந்நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை. "தி இ பிளேன் கம்பெனி" என்ற பெயரில் அறியப்படும் "யூபிஃப்ளை டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்" (Ubifly Technologies Private Limited) 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2023-24 நிதி ஆண்டில் தனது முன்னாள் மாணவர்கள், தொழில் துறைகள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து 513 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச நிதியை ஐஐடி மெட்ராஸ் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பங்காளர்களிடமிருந்து மொத்தம் ₹717 கோடி புதிய நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications