இந்தியாவில் சமீப காலமாகப் பெரிய கார்கள் மீதான ஆர்வம் மக்களைத் தொத்திக்கொண்டு உள்ளது, இதனால் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் அதிகளவில் எஸ்யூவி கார்கள், காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையாகி வருகிறது. இதனால் ஹேட்ச்பேக் கார்கள், செடான் கார்கள் விற்பனையாவது பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்தியாவில் எஸ்யூவி கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பல தரமான எஸ்யூவி கார்களைத் தயாரித்து நீண்ட காலமாக இந்திய எஸ்யூவி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார்களுக்கு இன்றும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்க வேளையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XUV 700 மற்றும் புதிய மாடல் மந்திரா தார் ஆகியவை இளம் கார் பிரியர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக மஹிந்திரா தார் கார் வாங்குவதற்குப் பல லட்சம் இளைஞர்கள் தவம் கிடைக்கும் வேளையில் ஒரு சிறுவனின் வீடியோ மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா-வை ஈர்த்துள்ளது.
நொய்டாவில் சீக்கு யாதவ் என்ற சிறுவன் மஹிந்திரா தார் காரை தனது சேமிப்பான தொகையான 700 ரூபாய்க்கு வாங்க விரும்பும் வீடியோ பலரின் இதயங்களில் இடம்பிடித்துள்ளதோடு, இணையம் முழுவதும் சிரிப்பலையைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவில் 700 ரூபாய்க்கு ஒரு மஹிந்திரா தார் வாங்குவது குறித்துச் சிறுவன் தனது தந்தையிடம் பேசுவது தான் இந்த வீடியோவில் உள்ளது.
சீக்கு யாதவ்-ன் பெயரில் உள்ள இன்ஸ்டா கணக்கில் பல பதிவுகள் பதிவிடப்பட்டு இருந்தாலும், மஹிந்திரா தார் குறித்த இவரது வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது, இதன் வாயிலாக ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. வழக்கம் போல் டிவிட்டர் சூப்பர்ஸ்டார் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டார்.
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், என்னுடைய நண்பர் சோனி இந்த வீடியோவை அனுப்பினார். அனைவரையும் போலவே எனக்கும் சீக்குவை மிகவும் பிடிக்கும் அவருடைய சில வீடியோக்களைப் பார்த்துள்ளேன். இந்த வீடியோவில் வருவது போல் 700 ரூபாய்க்கு தார் காரை விற்றால் சீக்கிரம் திவாலாகி விடுவேன் அது மட்டும் தான் பிரச்சனை மற்றப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை.


Click it and Unblock the Notifications