சமுக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் இந்திய தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர் ஆனந்த் மஹிந்திரா, இவர் தன்னுடைய டிராவல் பதிவுகள், தன்னை கவர்ந்த மக்களின் செயல்கள் என எவ்விதமான ஃபில்டர்களும் இல்லாமல் மக்களுடன் நெருங்கி பழகக்கூடிய வகையிலான பதிவுகளை செய்து வருகிறார்.
ஆனால் உணவுக் குறித்து பதிவுகளையும், உணவுக்காக பயணம் செய்ய வேண்டும் என்ற வகையில் Anand Mahindra இதுவரையில் பதிவுகளை செய்தது மிகவும் குறைவு, அரிதும் கூட. அப்படியிருக்கையில் கேரளாவில் டிரெண்டாகி வரும் சட்னி மாமி கடையில் பாகுபலி தோசையை பார்த்து ஆடிப்போய் உள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

பாகுபலி என்ற பெயருக்கு ஏற்றார் போல் சுமார் 1.5 மீட்டர் அளவிலான நீளமான தோசை, அதற்கு 4-5 வகையிலான சட்சி, சாம்பார், கிழங்கு என கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது கேரள மாநிலத்தின் கிளிமானூர் பகுதியை சேர்ந்த சட்னி மாமி ஹோட்டல்.
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் சிறப்பான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த சட்சி மாமி ஹோட்டல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்னி மாமி ஹோட்டலின் பாகுபலி தோசை வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஷேர் செய்துள்ளதாக கூறிய அவர், இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய பேரன் தான், அவன் மிகப்பெரிய தோசை விரும்பி என்பதால் இதை தான் தேர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஞாயிற்றுக்கிழமை கிளிமானூர் சட்னி மாமி கடை பாகுபலி தோசைக்காக தனது மொத்த குடும்பத்தையும் டெலிபோர்ட் செய்யப்போவதாக ஆனந்த் மஹிந்திரா கிண்டலாகவும் தெரிவித்துள்ளார். இல்லையெனில் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் விரைவில் இன்டர் ஸ்டேட் ட்ரோன் டெலிவரி சேவையை துவங்கலாம் எனவும் ஆனந்த் மஹிந்திரா கூறினார், ஆனால் அடுத்த வரியிலேயே தோசை அதன் மொறு மொறுப்பை இழந்துவிடும் எனக்கு தெரியும், அப்படியாவது இதை சாப்பிடலாம் என எண்ணத்தில் இப்படி கூறி இப்பதிவை முடித்தார்.
ஆனந்த் மஹிந்திரா-வின் இந்த பாகுபலி தோசை பதிவு சுமார் 1 லட்சம் பார்வையாளர்களை டிவிட்டரில் பெற்றுள்ளது, இந்த பதிவுக்கு பலர் தாங்கள் சாப்பிட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த தோசை குறித்தும், கடையை குறித்தும் மக்கள் பல தரவுகளை அடுத்தடுத்து அடுக்கி வருகின்றனர். இதன் மூலம் கடந்த 3-4 நாட்களாக சோதை மாமி கடை கேரளாவை தாண்டி இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளது.
சட்னி மாமி கடையில் பிற உணவுகளும் இருந்தாலும் மக்கள் அதிகம் பேசுவது இந்த ஒரு பாகுபலி தோசையை பற்றி தான். கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகாவிலும் இந்த பெரிய சைஸ் பேமிலி தோசை பல ஆண்டுகளாக இருந்தாலும், ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவீட் மூலம் இக்கடை பேமஸ் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications