குஜராத்: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரென் மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் கவனம் ஈர்த்து ஒரு திருமண நிகழ்வாக இது இருந்தது.
ஆனந்த் அம்பானி திருமணம்: ஆனந்த் அம்பானி திருமணம் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உலக அரங்கிற்கு கொண்டு சென்றது. திருமணம் மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்வுகள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டன. பல்வேறு துறைகளை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நபர்கள் இந்த நிகழ்வுக்காக இந்தியாவிற்கு வருகை தந்தனர் . இந்த திருமண நிகழ்வுகள் இந்திய கலாச்சாரத்தை மட்டும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவில்லை, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் நிரூபிக்கும் ஒரு நிகழ்வாக மாறியது.

நவீனமும், பாரம்பரியமும்: ஜூலை மாதம் 12ஆம் தேதி தான் குஜராத் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்தே அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் அரங்கேற தொடங்கி விட்டன . தொடர்ச்சியாக பல்வேறு வரவேற்பு நிகழ்வும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் அம்பானி குடும்பத்தினரின் தனிப்பட்ட ரசனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. பாரம்பரிய சடங்குகளோடு நவீன பொழுதுபோக்குகள் என பங்கேற்பாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை இவர்களின் திருமண நிகழ்வுகள் வழங்கின.
சர்வதேச கவனம்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண நிகழ்வு உலக அளவில் கவனம் பெற்றதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவிலான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டதுதான். இந்தியாவின் மரபுகளையும், சமகால கொண்டாட்ட முறையையும் ஒருங்கிணைத்து உலகெங்கிலும் இருக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் விருந்துகள் மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன . நவீனத்துவத்தை தழுவி பாரம்பரியத்தையும் காக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்பதை இந்த திருமண நிகழ்வுகள் வெளிப்படுத்தின என்பதை மறுக்க முடியாது.

டெக் நிறுவன தலைவர்கள் பங்கேற்பு: திருமண நிகழ்வில் பல்வேறு தொழிலதிபர்கள், பெரிய டெக் நிறுவனங்களின் தலைவர்கள் , திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல துறை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தரப்பை சேர்ந்த பிரபலங்களும் ஒருங்கிணைந்த ஒரு நிகழ்ச்சியாகவும் இது மாறியது. பொதுவாக ஒரு குஜராத்தி திருமணத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடக்குமோ அவை அனைத்தையும் இவ்விருவரின் திருமணத்தில் பின்பற்றினர்.
பாரம்பரிய சடங்குகள்: மெஹ்ந்தி, சங்கீத், ஃபெராஸ் ஆகிய அனைத்து அனைத்து நிகழ்வுகளும் இதில் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளோடு தீம் அடிப்படையிலான பார்ட்டிகள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் நேரலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இது உள்ளூர் மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கி தந்தது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக இந்த திருமண நிகழ்வுகளில் எல்லாம் ராதிகா அணிந்திருந்த ஆடைகளும் அணிகலன்களும் உலக கவனம் பெற்றது.

தனிகவனம் பெற்ற ஆடைகள்: முன்னணி பேஷன் நிறுவனங்களாலும் கலைஞர்களாலும் இந்தியாவின் பாரம்பரியத்தை நவீன கால ஸ்டைலுடன் இணைத்து ராதிகா மெர்சண்டின் ஆடைகளும் அணிகலன்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. உலக பேஷன் ட்ரெண்டில் இந்தியாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அவரது ஆடைகளும் அணிகலன்களும் இருந்தன.
சமூகவலைதளங்களில் டிரெண்ட்: ஆனந்த் அம்பானி திருமணம் மற்றும் அதனையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்துமே சமூகவலைதளங்களில் டிரெண்டானது. திருமணம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்வுகள், பார்ட்டிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகின . இதன் மூலம் இந்திய கலாச்சாரமும் அம்பானி குடும்பத்தினரின் பிரம்மாண்டமும் உலககிற்கே சென்று சேர்ந்தது.
தனிப்பட்ட குடும்ப நிகழ்வு அல்ல: இந்த திருமண நிகழ்வு என்பது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கொண்டாட்டம் அல்ல இந்தியாவின் கலாச்சாரத்தை உலகிற்கே கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். நவீன விஷயங்களோடு நம்முடைய பாரம்பரிய சடங்குகளும் பழக்க வழக்கங்களும் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம்: இந்தியா புதுமையை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் பாரம்பரியத்தையும் கைவிட்டு விடாது என்பதற்கு உதாரணமாக இவர்களின் திருமண நிகழ்வுகள் இருந்தன. அதுமட்டுமல்ல சர்வதேச பிரபலங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடம்பர கொண்டாட்டங்களுக்கான மையமாக இந்தியாவை உலக அரங்கில் நிலை நிறுத்தியது . பிரம்மாண்ட நிகழ்வுகளை சிறப்பாக திட்டமிட்டு பாதுகாப்பான முறையில் நடத்துவதில் இந்தியா சிறந்த நாடாக இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக ஆனந்த் அம்பானி திருமணம் அமைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications