முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்து தான் இந்தியாவே வியந்து பேசி கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் குஜராத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் ஆகும்.
உலக பெரும் பணக்காரர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் இளைய மகனான ஆன்ந்த் அம்பானிக்கு, விரேன் மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்ச்சண்ட்டுடன் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இவர்கள் இருவரும் காதலித்து வருவது 2018ஆம் ஆண்டு சமூகவலைதளங்களில் வெளியாக புகைப்படம் மூலம் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவருக்கும் 2023 ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.
குடும்பம்: முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதிக்கு 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி மகனாக பிறந்தார் ஆனந்த் அம்பானி. இவருக்கு சிறு வயது முதலே பல்வேறு உடல்நல பிரச்னைகள் இருக்கின்றன.
ஆஸ்துமா மற்றும் அதற்கு எடுத்து கொண்ட மருந்துகளால் உடல் எடை கூடியது என தொடர் பிரச்னைகளை சந்தித்து வந்தார் ஆனந்த் அம்பானி. உடல் நல பிரச்னைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து பெரிய அளவில் உடல் எடையை குறைத்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார் ஆனந்த் அம்பானி.
அதே வேளையில் ராதிகா மெர்ச்சண்ட் 1994ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை, வீரேன் மெர்ச்சண்ட் என்கோர் ஹெல்த்கேர் என்ற மருந்து நிறுவனத்தின் தலைவராவார். இதனால் சிறு வயது முதலே ராதிகா மெர்ச்சண்ட்டுக்கு தொழில் துறை மீது ஆர்வம் உண்டு.
கல்வி: ஆனந்த் அம்பானி பள்ளி படிப்பை இந்தியாவில் முடித்து விட்டு இளநிலை படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே பிரவுன் பல்கலைகழகத்தில் மேலாண்மை துறையில் இளநிலை படிப்பை முடித்தார்.
பாரம்பரியமாக தொழில் சாம்ராஜ்யத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம் என்பதால் தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகம். தி ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் எனப்படும் குழுமத்தின் அறக்கட்டளைகளில் இவருக்கு ஈடுபாடு அதிகமாகும். சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதோடு, விலங்குகளுக்கான மறு வாழ்வு மையத்தை நடத்தி வருகிறார்.

ராதிகா மெர்ச்சண்ட்டும் இந்தியாவில் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் இளநிலை படிப்புக்காக சென்றார். பின்னர் நியூயார்க் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் இளநிலை படிப்பை முடித்தார். தற்போது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாரிய இயக்குநராக இவர் இருக்கிறார்.
சொத்து மதிப்பு: 2023ஆம் ஆண்டு ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக இணைக்கப்பட்டார். இதன் மூலம் அவருக்கு ஊதியம் கிடைக்காது என்றாலும் லாபத்தில் பங்கு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். இதன்படி ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு 3.31 லட்சம் கோடி ரூபாயாகும்.
ராதிகா மெர்ச்சண்டை பொறுத்தவரை தந்தை வீரேன் மெர்ச்சண்டின் நிறுவனத்தில் வாரிய உறுப்பினர்களில் ஒருவர். எனவே அவரது சொத்து மதிப்பு 755 கோடி ரூபாய் ஆகும்.
இருவரின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுக்காக பல ஆயிரம் கோடிகளை அம்பானி குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர். 2,500 வகையான உணவுகள் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் விருந்தாக பரிமாறப்பட்டது.
Story Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications