இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும், வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டும் ஜூலை 12, 2024 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பல மாதங்களாக, பலரின் எதிர்பார்ப்பைத் தூண்டியது. ஜாம்நகரில் நடந்த பிரமாண்ட திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் அனைத்தும் கண்கவர் கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தது. மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும், மணமகன் அணிந்திருந்த சிங்க வடிவ ப்ரூச் (Brooch) பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிரமிக்க வைக்கும் ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுடன் திருமண கொண்டாட்டங்கள் ப்ரமாண்டமாக நடந்து முடிந்தன. பங்கேற்பாளர்களை கண்களை அலங்கரிக்கும் வகையில் நடந்து முடிந்த இந்தத் திருமணத்தில் மணமகன், ஆனந்த் அம்பானி அணிதிருந்த சிங்க வடிவ ப்ரூச் தான் ஹைலைட்.

ப்ரூச் (Brooch) என்றால் என்ன? ப்ரூச் என்பது ஒரு அலங்கார நகை ஆகும். இந்த ப்ரூச்சுக்கு பின்னால் ஒரு பின் இருக்கும். இதை வைத்து பெண்கள் தங்களுடைய ஆடைகளில் இதனை அணிந்து கொள்வார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கோட் அல்லது ஜாக்கெட்டை அணிவதற்கு, இதுபோன்ற ப்ரூச்களை பயன்படுத்துவார்கள்.
புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளரான லொரெய்ன் ஷ்வார்ட்ஸ் வடிவமைத்த இந்த சிங்க வடிவிலான ப்ரூச், ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது முதன்முதலில் அனந்த் அம்பானி அணிந்திருப்பது தென்பட்டது. இந்த ப்ரூச், மஞ்சள் வைரங்களைக் கொண்டு செய்யப்பட்டது, சிங்கத்தின் கண்களுக்கு மரகதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரூச்சின் முக்கிய அம்சம் சிங்கத்தின் வாயில் இருந்து தொங்கும் 50 கேரட் வைரம் தான்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஸ்வார்ட்ஸ் ப்ரூச்சின் வடிவமைப்பில் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் கவனம் செலுத்தியதாகக் கூறியுள்ளார். மஞ்சள் வைரங்கள் சிங்கத்தின் மேனிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்கம் வெள்ளை வைரங்களால் ஆன ஒரு பீடம் போன்ற அமைப்பில் அமர்ந்துள்ளது. இது மிகவும் அடக்கமாக சிங்கம் அமர்ந்திருப்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

விலங்குகள் மறுவாழ்வு மையமான வந்தாராவை அமைத்த அனந்த் அம்பானி, விலங்குகள் மீதான தனது அன்பையும், வனவிலங்கு பாதுகாப்பில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் குறிக்கும் வகையில் சிங்க ப்ரூச்சைத் தேர்ந்தெடுத்து அணிதிருந்தார்.
லோரெய்ன் ஸ்வார்ட்ஸ் ப்ரூச்சின் உருவாக்கம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளர். அவர் தனது பதிவில், "இந்த அற்புதமான ஜோடி ராதிகா மற்றும் அனந்த் ஆகியோரின் திருமணத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜாம்நகரில் அவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ஆனந்தின் பிரகாசமான மஞ்சள் வைர லயன் ப்ரூச் வேலை செய்வதை நான் மிகவும் ரசித்தேன்" என்று கூறியுள்ளார்.
இந்த பிரமாண்ட திருமண விழா கலாச்சாரம், பாரம்பரியத்துடன் மக்களை ஈர்த்து வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications