முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
சந்தை மூலதன அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முகேஷ் அம்பானியின் மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் மகள் ஈஷா அம்பானி ஆகிய மூன்று பேரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அந்த வகையில் முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் என்ற பொறுப்பை வழங்கியிருக்கிறார்.
மே 1ஆம் தேதியில் இருந்து ஐந்தாண்டு காலத்திற்கு ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக செயல்படுவார் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாரிய குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்குச்சந்தையிலும் தாக்கல் செய்துள்ளது. ஆனந்த் அம்பானி ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் Non-executive director ஆக செயல்பட்டு வந்தார். தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பு ஆனந்த் அம்பானிக்கு கிடைத்துள்ளது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்திற்கு உட்பட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகுத்து வருகிறார்.2020ஆம் ஆண்டில் இருந்து ஜியோ பிளாட்பார்ம்ஸை கவனித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் இவர் முக்கிய பொறுப்பை ஏற்றார்.
2021 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நியூஸ் சோலார் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் இவருக்கு பதவி வழங்கப்பட்டது. அதேபோல ரிலையன்ஸ் பவுண்டேஷனிலும் இவர் ஒரு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். ஆனந்த் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருப்பவர். விலங்குகள் நலன் சார்ந்த ஒரு அமைப்பை நிறுவியவர் .
கடந்த ஆண்டு தான் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானி மற்றும் சகோதரி ஈஷா அம்பானி ஆகியோரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் Non-executive டைரக்டர்களாக பணியில் இருக்கின்றனர். ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவராக இயங்கி வருகிறார். ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக செயல்படுகிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications