இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி நிர்வாக பொறுப்பை தனது வாரிசு கைகளுக்கு கொடுக்கும் விதமாக உயர்மட்ட நிர்வாக குழுவில் முக்கிய மாற்றத்தை அறிவித்தார்.
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் இருந்து நீதா அம்பானி-யை நீக்கிவிட்டு, முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை Non Executive Directors பதவியில் நியமித்தார்.

இங்கு தான் பிரச்சனை துவங்கியுள்ளது, ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரின் நியமனத்திற்கு பங்குதாரர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வரும் போது சர்வதேச ப்ராக்சி அலோசகர் நிறுவனமான Institutional Shareholder Services Inc செக் வைத்துள்ளது.
Institutional Shareholder Services Inc நிறுவனம் முகேஷ் அம்பானி அறிவிப்பின் படி, அனந்த் அம்பானி-யை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர்ப்பதை எதிர்க்க ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் வாரிசுகளின் கைகளுக்கு பொறுப்பை மாற்றும் முக்கியமான திட்டத்தில் புதிய பிரச்சனை வந்துள்ளது.
அனந்த் அம்பானி-க்கு லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிர்வாக குழுவில் வெறும் 6 வருடம் மட்டுமே அனுபவம் கொண்டுக்கு இருப்பதால் இவரால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் போதுமான மற்றும் திறன்வாய்ந்த பங்கீட்டை கொடுக்க முடியமா என சந்தேகம் இருப்பதாக Institutional Shareholder Services Inc நிறுவனம் அக்டோபர் 12 ஆம் தேதி தெரிவித்தது.
இதேவேளையில் Institutional Shareholder Services Inc நிறுவனம் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி நியமனத்தை சரியானதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை Non Executive Directors பதவியில் நியமிப்பதின் வாக்கெடுப்புகள் முடிகிறது.
இதேபோன்ற பரிந்துரையை தான் மும்பையை தலைமையிடமாக கொண்ட Institutional Investor Advisory Services நிறுவனம் அக்டோபர் 9 ஆம் தேதி அறிவித்தது. வெறும் 28 வயதான அனந்த் அம்பானி 6 வருடம் மட்டுமே நிர்வாக பொறுப்புகளை கொண்டிருக்கும் வேளையில் வாக்குறுதி விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என தெரிவித்துள்ளது. இதையே தான் ISS அமைப்பும் தெரிவித்துள்ளது.
31 வயதான ஆகாஷ் அம்பானியும், ஈஷா அம்பானியும் 2014 முதல் நிர்வாக பணியில் இருந்து வருகின்றனர். தற்போது ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளையும், முதலீடுகளையும் ஜியோ பிரா ண்டின் கீழ் நிர்வாகம் செய்து வருகிறார். ஈஷா அம்பானி ரீடைல் வர்த்தக பிரிவான ரிலையன்யன் ரீடைல் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி அமைத்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications