உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த போது புட்பால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவில்லாமல் போனது. அவரது இந்திய பயணம் விளையாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிய செய்தியாக அமைந்தது. ஒருபக்கம் மைதானத்தில் மக்கள் செய்த கலவரம், மறுமுனையில் மெஸ்ஸி-க்கு ஷாக் கொடுத்த முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி என அதிரடிகளுக்கு பஞ்சம் இல்லாமல் போனது.
லியோனல் மெஸ்ஸி-யின் இந்திய பயணத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி நடத்தும் வன்தாரா வனவிலங்கு மீட்பு மையத்துக்கு சென்றது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

வன்தாரா சென்ற மெஸ்ஸிக்கு, ஆனந்த் அம்பானி அரிய ரிச்சர்ட் மில்லே கடிகாரத்தை பரிசாக அளித்தார். மெஸ்ஸி வன்தாரா மையத்துக்கு வந்தபோது அவர் கையில் இந்த கடிகாரம் இல்லை, ஆனால் வெளியேறும் தருணத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படத்தில் கையில் கடிகாரத்தை கட்டியிருந்தார். அவர் அணிந்திருந்த கடிகாரம் உலகளாவில் மக்கள் கவனத்தை ஈர்த்தது. காரணம் இது அரிய வாட்ச் ஆகும்.
ஆனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு பரிசளித்த கடிகாரத்தின் பெயர் ரிச்சர்ட் மில்லே RM 003-V2 GMT டூர்பில்லான் 'ஆசிய எடிஷன்'. இது உலகில் வெறும் 12 வாட்ச் மட்டுமே உள்ள அரிய மாடல் என்பதால் இதன் விலையும் சற்று அதிகம்.
இதன் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர், அதாவது ரூ.9.92 கோடி முதல் ரூ.10.91 கோடி வரையில் இருக்கும் கணக்கிடப்படுகிறது. இந்த கடிகாரம் கார்பன் TPT என்ற பொருளால் செய்யப்பட்டு டூர்பில்லான் இயக்கம் கொண்டது. இது ஆடம்பர கடிகார ஆர்வலர்களுக்கு மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இதேவேளையில் ஆனந்த் அம்பானியும் ஒரு கடிகாரம் அணிந்திருந்தார், இது மெஸ்ஸி வைத்திருந்த கடிகாரத்தை காட்டிலும் பல மடங்கு காஸ்ட்லியானது. ஆனந்த் அம்பானி கட்டியிருந்தது ரிச்சர்ட் மில்லே RM 056 சபையர் டூர்பில்லான், இது உலகிலே ஒரே ஒரு கடிகாரம் மட்டுமே உள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலர், அதாவது ரூ.45.59 கோடி அளவில் மதிப்பிடப்படுகிறது. இந்த கடிகாரம் முழுவதும் சபையர் கிரிஸ்டல் மூலம் செய்யப்பட்டதால் இது உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரங்களில் ஒன்றாக உள்ளது.
ஆனந்த் அம்பானி மிகப்பெரிய வாட்ச் கலெக்டர், இவரிடம் இல்லாத அரிய வாட்ச்-க்களே இல்லை என்ற அளவுக்கு வீடு முழுக்க காஸ்ட்லியான வாட்ச்களை வைத்துள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகியவோரின் திருமணத்திற்கு வந்த போது வன்தாரா-வுக்கு வந்த Meta நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆனந்த் கட்டியிருந்த வாட்ச்-ஐ கண்டு வியந்தார். இதோடு நிற்காத அவர் தற்போது பல காஸ்ட்லியான வாட்ச்களை வாங்க துவங்கி அவரை வாட்ச் கலெக்டராக மாறினார் ஆனந்த் அம்பானி.


Click it and Unblock the Notifications