ஆனந்த் அம்பானியை விட ராதிகா மெர்ச்சன்ட் வயதில் மூத்தவரா.. ஷாக் விஷயம்..!!

முகேஷ் மற்றும் நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் உடனான திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டத்தையொட்டி மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளனர்.

ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி கடந்த 10 வருடத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டுப் பெறப்பட்ட பிரபலத்தை வெறும் 2 வருட வர்த்தக ஈட்டுப்படலிலும், ராதிகா மெர்ச்சண்ட் உடனான காதல், திருமண நிகழ்ச்சி மூலம் பெற்றுவிட்டார். அம்பானி குடும்பத்தில் தற்போது முகேஷ் அம்பானி - நீதா அம்பானிக்கு அடுத்தது அதிகம் பிரபலமாக இருப்பது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் தான்.

ஆனந்த் அம்பானியை விட ராதிகா மெர்ச்சன்ட் வயதில் மூத்தவரா..  ஷாக் விஷயம்..!!

திருமணத்திற்கு முந்தைய முதல் கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய புகைப்படங்களுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது 2வது கொண்டாட்டத்திற்கு மொத்த குடும்பமும் தயாராகியுள்ளது.

இங்கு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானியை விட கிட்டத்தட்ட ஒரு வயது மூத்தவர் என்பது. இதுநாள் வரையில் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்த நிலையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டிசம்பர் 18, 1994 அன்று குஜராத்தில் பிறந்த ராதிகா, ஏப்ரல் 10, 1995 அன்று பிறந்த ஆனந்த் அம்பானியை விட ஒரு வயது மூத்தவர். இருப்பினும், இந்த வயது வித்தியாசம் அவர்களின் நீண்ட கால நட்பு மற்றும் பிணைப்பை மறைக்கவில்லை.

இதே போல், ஆகாஷ் அம்பானியை விட ஸ்லோகா மேத்தா ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்லோகா மேத்தா ஜூலை 11, 1990 இல் பிறந்தவர், ஆகாஷ் அம்பானி அக்டோபர் 23, 1991 இல் பிறந்தவர்.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் நிச்சயதார்த்தம் டிசம்பர் 2022 இல் ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஷ்ரிநாத்ஜி கோயிலில் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து ஜனவரி 2023 இல் அம்பானி இல்லமான ஆண்டிலியாவில் பிரமாண்ட விழா நடைபெற்றது.

மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகரில் நடைபெற்ற அவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் ஸுக்கர்பேர்க் மற்றும் பில் கேட்ஸ் போன்ற உலக தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் போன்ற பாலிவுட் பிரபலங்கள், ரியானா போன்ற வெளிநாட்டுப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

மே 28 மற்றும் 30 க்கு இடையில் தெற்கு பிரான்ஸ் கடற்கரையில் ஒரு க்ரூஸ் கப்பல் பயணத்தில் திட்டமிடப்பட்ட மற்றொரு திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து ஜூலை 10 முதல் 12 தேதியில் திருமணம் நடக்க உள்ளது.

யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்..?

தொழிலதிர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட், இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட் படிப்பை முடித்ததும் பல பணக்கார தொழிலதிபர்கள் குடும்பத்தைப் போலவே வீரேன் மெர்ச்சன்ட் தனது மகளை வர்த்தகத் துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இயக்குநராக நியமித்தார்.

2017 இல், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் Isprava Group என்ற ஒரு ஆடம்பர ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் ராதிகா மெர்ச்சன்ட். இந்த நிறுவனத்தில் நாதிர் கோத்ரேஜ், ஆனந்த் பிரமல் மற்றும் டாபர் இந்தியாவின் பர்மன் குடும்பம் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை மும்பையின் புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார். மேலும் ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், இவர் குரு பாவனா தாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ராதிகா மெர்ச்சன்ட்டின் அரங்கேற்றம் விழாவை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ராதிகா மெர்ச்சன்ட் சுமார் 8 ஆண்டுகளாகப் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு அமீர் கான், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், சகாரிகா காட்கே, ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான் எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.

வீரேன் மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி. ஆனால் அவரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.10 கோடி மட்டுமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+