ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோகத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உல்லாச படகு சவாரி படுஜோராக நடைபெற்றது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில் அந்த படகு நங்கூரமிட்டுள்ளது.
படகில் ஆல்பிரட் ஹிச்காக்கின் 1955 ஆண்டு திரைப்படமான கேட்சி தி தீஃப் பின்னணியில் பிரமாண்டமான ஆடல் மேடை அமைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் அதில் மகிழ்ச்சியுடன் ஆடி மகிழ்ந்தனர்.

தி ஐல் ஆப் யூ என்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களால் இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக ராதிகா மெர்ச்சன்ட் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வெர்சேஸ் டிரஸ்ஸை அணிந்திருந்தார்.
கவர்ச்சியான நீல நிற ஆடையை ராதிகாவுக்காக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஷலீனா நதானி வெகு நேர்த்தியாக அமைத்திருந்தார். இந்த ஆடை பிரமாதமாகவும் ரொமான்ஸாகவும் இளமையாகவும் காட்டும் அளவுக்கு இருந்ததாக ராதிகா பூரிப்போடு கூறியுள்ளார்.
இந்த கண்கவர் ஆடைக்குப் பொருத்தமாக ஒரு அரிய நீல நிற ஓபல் நெக்லஸ்ஸை அணிந்திருந்தார். இந்த வைர நெக்லஸை லோராய்ன் ஸ்வார்ட்ஸ் டிசைன் செய்திருந்தார். நீல நிற ஓபல் ராதிகாவின் ஜென்ம ராசிக்கல் ஆகும். அதிலுள்ள வைரங்கள் ஆனந்த்தை பிரதிபலித்தது.

ராதிகாவையும் ஆனந்தையும் பிணைத்திருப்பது போல சிம்பாலிக்காக இந்த நெக்லஸ் வடிவமைக்கபட்டிருந்தது.
நிகழ்ச்சியின்போது ஆனந்த் அம்பானி ஒரு தரமான டோல்ஸ் அண்டு கப்பானா டிரஸ்ஸை அணிந்திருந்தார். இந்த ஆடை அவருக்காகவே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்றபடி இந்த ஆடை மிக ஆடம்பரமாக அமைந்திருந்தது.

ஆடல் நிகழ்ச்சிக்காக விருந்தினர்களும் சிறப்பான ஆடைகளில் அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சி அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஏற்றபடி இருந்தது.
திருமண முன்வைபோகத்தின் பிற நிகழ்ச்சிகளைப் போல இந்த நிகழ்வும் ஆனந்த் ராதிகா ஜோடியின் அன்பை பிரமாதமாக வெளிப்படுத்தியது. கலை, பேஷன், எல்லையற்ற ஆடம்பரம் எங்கெங்கும் பிரதிபலித்தது.
இந்த ஆடல் நிகழ்ச்சி அன்றைய இரவில் எல்லாரையும் வெகுவாக குதூகலப்படுத்தியது. விருந்தினர்களும் திருமண ஜோடியும் ஆட்டம் பாட்டம், சிரிப்பு, இசை மழையில் திளைத்தனர். இந்த நிகழ்ச்சி அவர்கள் அனைவருக்கும் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications