இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்-ன் திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் வேளையில் ஜூலை 2ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சுவாமி விவேகானந்த வித்யாமந்திரில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் பிரம்மாண்ட விழா அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது மொத்த குடும்பமும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு தயாராகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆனந்த் அம்பானி மகாராஷ்டிராவின் நேரல் எனும் இடத்தில் உள்ள கிருஷ்ண காளி கோயிலுக்கு சென்று கடவுளை வேண்டி வணங்கினார். மேலும், அக்கோயிலில் ஆனந்த் அம்பானி ஹோமம் ஒன்றையும் நடத்தினார்.

இதேபோல் கடந்த வாரம், நீதா அம்பானி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று முதன் முதலில் திருமண அழைப்பை சிவபெருமான் பாதத்தில் வைத்து வணங்கி திருமண ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் பாரம்பரிய இந்து வேத முறைப்படி நடைபெறும், ஜூலை 12ம் தேதி பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் உள்ள பிரமாண்ட ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. மூன்று நாள் திருமண கொண்டாட்டங்களுக்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் மும்பையில் நடைபெறும் காரணத்தால் அரசியல் தலைவர், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் தலைவர்களும் கலந்துக்கொள்ள இருப்பதால் அன்டாலியா வீடு, தெரு, ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் என அனைத்தும் ஜெகஜோதியாக மாறுகிறதாம்.
வெள்ளிக்கிழமை முதல் விழாக்கள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முந்தைய ஆசீர்வாத நிகழ்வு (Shubh Aashirwad) சனிக்கிழமையும், இறுதி நிகழ்வான மங்கள உற்சவம் (Mangal Utsav) அல்லது திருமண வரவேற்பு விழா ஜூலை 14ம் தேதியும் நடைபெற இருக்கிறது.
ஜாம்நகரில் நடைபெற்ற ப்ரீவெட்டிங் விழாவில் பிரபலங்கள் உலகமெங்கும் இருந்து கலந்து கொண்டனர். இந்த விழாவில் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களின் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் உட்பட மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மற்றும் இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது இந்திய வரலாற்றில் காஸ்ட்லியான திருமணத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications